Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்றதுன்னு ஒரு சொலவடை இருக்குங்கறதை மக்கள் கண்டுக்க மாட்டாங்கன்னு நினைச்சிட்டாரோ...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பேட்டி:பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேசிய கொடி ஏற்றுவதை பற்றி, மத்தியில் ஆளும், பா.ஜ.,வினர் பேசுகின்றனர். அதற்கு முன், ஸ்ரீநகரின் மையப்பகுதியான, லால்சவுக்கில் மூவர்ண கொடியை ஏற்ற முடியுமா... அதையே செய்ய முடியாதவர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றி பேசுகின்றனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பது, காஷ்மீரின் ஒரு பகுதி அல்ல என, ஏற்கனவே, நான் கூறியதில்எந்த தவறும் இல்லை.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா பேச்சு:
ராஜஸ்தான் அரசு, பஞ்சாயத்து சட்டங்களில் திருத்தம் செய்தது போன்று, அனைத்து மாநில அரசுகளும்செய்ய வேண்டும். கிராம தலைவர் அல்லது பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு, குறைந்தபட்ச கல்வி தகுதியை நிர்ணயிக்க வேண்டும் என, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுத உள்ளோம்.


தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் பொன்னுசாமி அறிக்கை:தமிழகத்தின் முழுமையான பால் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல், அயல் வணிகம் துவக்கியிருப்பது தேவையற்றது. தனியார் பால் நிறுவனங்களின் போட்டியை சமாளித்து, ஆவின் பால் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் என்றால், அது பால் முகவர்களால் மட்டுமே சாத்தியம். இதை, ஆவின் நிர்வாகம் நன்கு உணர்ந்தும், பால் முகவர்களுக்கு நேரடி வர்த்தக தொடர்புகளை, தொடர்ந்து மறுத்து வருகிறது.

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நல்லசாமி அறிக்கை:மேற்கு தொடர்ச்சி மலையின் பாதுகாப்பை ஆராய, மாதவ காட்கில் தலைமையிலும், கஸ்துாரி ரங்கன் தலைமையிலும் குழுக்கள் அமைக்கப்பட்டன. மலைப் பகுதியில் புதிய கட்டுமானங்களும், பட்டா வழங்குவதற்கும் தடை விதிக்க, அக்குழு பரிந்துரை செய்தது. வளர்ச்சி என்ற பெயரில் வனத்தை அழிப்பதற்கும் தடை செய்ய வலியுறுத்தப்பட்டது. ஆனால், இந்த பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை.


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
சில தனியார் பள்ளிகளின் மாணவர்கள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தமிழ் கட்டாய பாடத் தேர்வு எழுதுவதிலிருந்து, விலக்கு பெற்றனர். ஆனால், நடப்பாண்டில், மாணவர்கள் நீதிமன்றத்திற்கு செல்வதற்கு முன்பே, சில தனியார் பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழ் கட்டாய பாடத் திட்டத்திலிருந்து, தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது. இதன் மூலம், மிகப்பெரிய துரோகத்தை தமிழக அரசுசெய்துள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement