Advertisement

'டவுட்' தனபாலு

தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர்: ஜெ., இருந்தபோது, ஆர்.கே.நகரில், அ.தி.மு.க., பெற்ற ஓட்டுகளுக்கும், தற்போது, முதல்வர் அணி, தினகரன் அணி, தீபா அணி என பிரிந்துள்ள நிலையில், பெறும் ஓட்டுகளுக்கும் உள்ள வித்தியாசத்தை அறிய முடியும்.


டவுட் தனபாலு: அடுத்த கட்சியின் ஆரோக்கியத்தை அறிய இவ்வளவு ஆவலாய் இருக்கீங்களே... தி.மு.க.,வின் தோளில் அமர்ந்தபடியே, எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏறினால், எப்படி உங்களின் பலத்தை அறிய முடியும்... தமிழக, காங்.,கின் பலம், யாருக்கும் தெரிஞ்சிடக்கூடாது என்பதில், எதற்கு இவ்வளவு கவனமா இருக்கீங்க என்ற, 'டவுட்' வருதே...!ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலுவின் மகன் தேஜ் பிரதாப்:
என் தந்தைக்கு அளிக்கப்பட்டு வந்த, 'இசட் பிளஸ்' பாதுகாப்பை, மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. அவருக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டால், பிரதமர் மோடியின் தோலை உரிப்பேன்.டவுட் தனபாலு: ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, தேர்தலில் நிற்க லாலுவுக்கு தடைவிதிக்கப்பட்டிருக்கு... இந்த லட்சணத்தில், இந்த வீராவேசம் எல்லாம் தேவையா... 'பாதுகாப்புக்குத் தவிப்பவர், எதுக்கு ஜாமின் கேட்டு வெளியே வந்தாரு'ன்னு, யாரும், 'டவுட்' எழுப்பிடப் போறாங்க...!
வி.சி., தலைவர் திருமாவளவன்: மதச்சார்பற்ற ஓட்டு வங்கி சிதறிவிடக் கூடாது என்பதற்காக, தி.மு.க.,வுக்கு ஆதரவு அளித்துள்ளோம். வரும், உள்ளாட்சி, லோக்சபா, சட்டசபை தேர்தல்களிலும், இந்தக் கூட்டணி நீடிக்கும் என நம்புகிறேன்.
டவுட் தனபாலு: 'ஆர்.கே.நகரில் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கும்படி, தொலைபேசி மற்றும் கடிதம் வாயிலாக ஸ்டாலின் கேட்டாரு... அதனால, ஆதரிக்கிறோம்'னு, 'பில்டப்'பா பேசினீங்களே... உள்ளாட்சி, லோக்சபா, சட்டசபை தேர்தலுக்கு, உங்களிடம் ஆதரவு கேட்டாங்களா... 'எப்ப கேட்பாங்க... உடனே ஒட்டிக்கலாம்'கற நிலையில் தான், இவ்வளவு நாளும் நீங்க இருந்தீங்களோ என்ற, 'டவுட்' வலுக்குதே...!

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    திருமாவால் திமுக விற்கு இழப்புதான் அதிகம். இதை ஸ்டாலின் புரிந்துகொண்டால் தப்பிக்கலாம்.

  • ppmkoilraj - erode.10,இந்தியா

    அதிமுக தற்போது எடப்பாடியார்,ஓபி எஸ் ,ஆகியோர் அணியில் மெஜாராட்டி மாவட்டங்களில்ஸ்டாங்கா தான் இருக்கு.ஆனா டிடிவி அணியினர் ஒரு சில மாவட்டங்களில் அதிமுகவின் ஓட்டுக்களைவாக்குகளை பிரிக்கும் நிலையில் உள்ளனர்.தீபா அணி சத்தியத்துக்கு கட்டு பட்டது போல கொஞ்சம் ஆங்காங் காங்கே அமைப்புக்களை வைத்துள்ளதாலும் தீபா மீதான நம்பிக்கை அவரை நம்பிசென்ற தொண்டர்கள்இழந்து வருகின்றனர்.வேறு வழியின்றி இனி எடப்பாடி,ஓபி எஸ் அணிக்கு சென்றால் கேவலம் என இங்கே இருந்து விடலாம் என்று இருக்கிறார்கள்.டிடிவி ஆதரவு அவரால் பயன் ,பணம்அடைந்தவர்கள்,அதன்மூலம் வழியின்றி அங்கு இருக்கிறார்கள்.எடப்பாடியாரும்,ஓபி எஸ் சும் அரசின் அதிகாரம் இருக்கும் வரை ஒன்று படுவார்கள்.ஆக பிரச்சனையான கட்டத்தை இன்னும் அதிமுக தாண்டவில்லை.ஆர்கே நகரில் வெற்றி என்பது ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்ட பணத்துக்கு ஏற்ப வெற்றி அமையுமா?என்பதே இப்போது உள்ள கேள்வி.

  • Nachimuthu.k.s. - Gobicheetipalayam,இந்தியா

    கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்துவிட கூடாது என கங்கணம் கட்டிய திருமாவளவனை தி.மு.க கூட்டணியில் சேர்த்தால் மேற்கு மண்டலத்தில் தி.மு.க விற்கு வீழ்ச்சியே ஏற்படும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement