Advertisement

அக்கம் பக்கம்

எல்லாம் ஒரு மரியாதை தான்!

பாலிவுட் நடிகர், ஷாருக்கான், அவ்வப்போது ஏடாகூடமாக பேசி, சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக வைத்துள்ளார். பின், அதிலிருந்து மீண்டு, இயல்பு நிலைக்கு வருவதற்குள், படாதபாடு படுவார்.சமீப காலமாக, சர்ச்சைகளில் சிக்காமல் ஒதுங்கியிருந்த அவருக்கு, அரசியல் ஆசை வந்து விட்டது போலிருக்கிறது. அதை, மறைமுகமாக வெளிப்படுத்த துவங்கியுள்ளார்.சமீபத்தில், திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக, மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவுக்கு வந்திருந்தார், ஷாருக். அந்த மாநில முதல்வரும், திரிணமுல், காங்., தலைவருமான, மம்தா பானர்ஜி தான், விழாவுக்கு தலைமை வகித்தார்.அங்கு, ஷாருக்கானின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் தெரிந்தது. அடிக்கடி மம்தாவுடன் பேசினார், அவர். 'இருவரும், அரசியல் பற்றித் தான் பேசுகின்றனர்' என, கூட்டத்திலேயே முணுமுணுப்பு எழுந்தது.விழா முடிந்து, ஷாருக்கான் விமான நிலையத்துக்கு புறப்பட்டபோது, அவர் அருகில் வந்த மம்தா, தன் காரை காட்டி, 'இதில் செல்லுங்கள்' என்றார்.ஷாருக்கானும், மம்தாவின் காலை தொட்டு மரியாதை செய்து விட்டு, காரில் ஏறி புறப்பட்டார். இதைப் பார்த்த எதிர்க்கட்சியினர், 'ஷாருக்கான், திரிணமுல் காங்கிரசில் சேருவது உறுதியாகி விட்டது' என்றனர்.திரிணமுல் கட்சியினரோ, 'மரியாதை காரணமாக, வயதில் மூத்த ஒருவரது காலைத் தொட்டு வணங்கினால், அதையும் அரசியல் ஆக்குகின்றனரே...' என, புலம்புகின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement