Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

தேர்தலில் 'பீட்டா'


நுகத்தடி பூட்டிய இரட்டைக் காளை, காங்., சின்னமாக இருந்தது. இந்திரா காங்கிரசுக்கு பசுவும் கன்றும் சின்னம் தரப்படடது. விலங்குகள், பூச்சிகள் போன்றவற்றைத் தேர்தலில் சின்னமாகப் பயன்படுத்தக் கூடாது என பிராணிகள் நல அமைப்புகள் வலியுறுத்தியதால், விலங்குகளை சின்னங்களாகத் தேர்ந்தெடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பகுஜன் சமாஜ், அசாம் கன பரிஷத் கட்சிகளுக்கு யானை சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பார்வர்டு பிளாக் கட்சிக்கு சிங்கம் சின்னம் தரப்பட்டுள்ளது. தேர்தல் சின்னங்கள் பதிவு மற்றும் ஒதுக்கீடு ஆணை 1968, திருத்தம் ஜூலை 2013ன் படி தற்போது ஒதுக்கப்படுகின்றன.

தகவல் சுரங்கம்

தீபத்தை போற்றும் ராகம்


வட மாநிலங்களில் தீபாவளியும், தமிழகத்தில் திருக்கார்த்திகையும் தீபங்களைப் போற்றும் பண்டிகைகள். கர்நாடக இசையில் ராகங்களின் பெயர்கள் அனைத்துமே காரணப் பெயர்கள். கர்நாடக இசையில் 'தீபரம்' என்னும் ஒரு ராகம் உள்ளது. இதன் பழைய பெயர் 'தீப்ரம்'. தீப்ர ராகம் என்றால், ஒளி வீசக்கூடிய ராகம். இதன் பெயருக்கு ஏற்றாற் போல இதனை சிதார், மாண்டலின், வீணை போன்ற கம்பிக் கருவிகளில் சரியாக வாசிக்கும் போது 'போகஸ் லைட்' இல்லாமலேயே வாசிக்கும் இசைக்கலைஞரின் முகம், தீபம் போன்று ஒளிருமாம். 'தீபரம்' ராகம் பெண் ராகம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement