Advertisement

அறிவியல் ஆயிரம்

எது மினரல் வாட்டர்
மழைக்காலம், பனிக்காலத்தில் மினரல் வாட்டர் விற்பனை அதிகமாக உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட நீருக்கும், தாது உப்புகள் உள்ள மினரல் வாட்டருக்கும் வேறுபாடுகள் உள்ளன. வெறும் சுத்திகரிக்கப்பட்ட நீரே, தற்போது மினரல் வாட்டர் என விற்பனை செய்யப்படுகிறது. தாதுக்களின் அளவு மாறாமலும், புதிதாக எதுவும் சேர்க்கப்படாமலும் ஊற்றில் இருந்து நேரடியாக சேகரித்த நீரே மினரல் நீராகும். எனவே பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் நீரை, சுத்திகரிக்கப்பட்ட நீர் என்று தான் கூற வேண்டும். மினரல் வாட்டர் என கூறக்கூடாது.

தகவல் சுரங்கம்

இயற்கை தலங்கள்
பஞ்சபூதங்களை மாசுபாடு இன்றி காத்து பேண வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பஞ்சபூத தலங்களுக்கு இந்து சமயத்தில் கோயில்கள் உள்ளன. கார்த்திகை திருவண்ணாமலை தீபம், உலக சுற்றுலா வரைபடத்தில் முக்கிய திருவிழா. நெருப்புக்குரிய தலமாக திருவண்ணாமலையை வைத்துள்ளனர். ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி காற்றுக்குரிய தலமாக உள்ளது. தமிழகத்தில் இருந்த காளஹஸ்தி மொழிவாரி பிரிவினையின் போது ஆந்திராவுக்கு சென்றது. திருச்சியில் உள்ள திருவானைக்காவல் நீருக்குரிய கோயில். ஆகாயதலம் சிதம்பரம். பிருத்வி என்னும் நிலத்துக்குரிய தலமாக காஞ்சிபுரம் உள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement