Advertisement

டீ கடை பெஞ்ச்

ரேஷன் பொருட்கள் மூலம் நாடகம்!


''இந்த அநியாயத்தை கேட்டேளா...'' என அங்கலாய்த்தபடியே, பெஞ்சில் அமர்ந்த குப்பண்ணா, தகவலைத் தொடர்ந்தார்...
''சமீபத்துல பெஞ்ச மழையால, தமிழகம் முழுக்க, நிறைய ரோடுகள் சேதமாயிடுத்து... இதை எல்லாம் சீரமைக்க முடிவு பண்ணியிருக்கா... சில இடங்கள்ல, புதுசாவே ரோடுகளை போடப் போறா ஓய்...
''இதுக்காக, வர்ற டிசம்பர்ல, 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு டெண்டர் விடப் போறா... அதுக்கு, இப்பவே, 'டீலிங்'கை ஆரம்பிச்சுட்டா...
''அந்தந்த பகுதி அமைச்சர்களுக்கு, 15ல இருந்து, 20 சதவீதம் வரை கமிஷன் தரணும்னு, கான்ட்ராக்டர்களிடம் பேச்சு நடந்துண்டு இருக்கு ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''வேலியே பயிரை மேயுற கதையை கேட்டீயளா வே...'' என்றார் அண்ணாச்சி.''எந்த ஊருல பா...'' என்றார் அன்வர்பாய்.''ரேஷன் கடைகள்ல, பொருட்கள் வினியோகத்தை கண்காணிக்க, தாலுகா, மாவட்ட அளவுல, நுகர்வோர் பிரதிநிதிகளை கொண்ட கண்காணிப்பு கமிட்டிகளை அமைச்சிருக்காவ...
''இந்த கமிட்டியினர், ரேஷன் வினியோகத்துல, தப்பு தண்டா நடந்தா, மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தரணும்... மத்தபடி, கடை நிர்வாகங்கள்ல தலை
யிடக் கூடாது வே...
''மதுரை மாவட்ட கமிட்டியில இருக்கிற சிலர், ரேஷன் கடைகள்ல, அடாவடி வசூல் பண்ணுதாவ... ஒரு சிலர், கடையில இருக்கிற கார்டுகள் எண்ணிக்கைக்கு ஏத்த மாதிரி, 'கட்டிங்' வெட்டுங்கன்னு அதிகாரம்
செய்யுதாவ...
''குடுக்க மறுத்தா, 'தப்பே நடக்கலைன்னாலும், நடந்ததா, மாவட்ட நிர்வாகத்துல போட்டு குடுத்துருவோம்'னு மிரட்டியே வசூல் பண்ணுதாவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.
''நானும் ரேஷன் கடை மேட்டர் ஒண்ணு சொல்றேங்க...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.
''என்ன விபரம் வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.''தமிழக ரேஷன் கடைகளில், ஒரு கிலோ துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, தலா, 30 ரூபாய்க்கும் வித்தாங்க... தனியார்கிட்டேர்ந்து வாங்கி, குறைஞ்ச விலையில வித்திட்டிருந்தாங்க... ஆனா, தரமே இல்லாம இருக்கும்...
''அதனால
இந்த, 'பர்ச்சேசை' நிறுத்திடலாம்ன்னு, அதிகாரிகள் முடிவு செஞ்சாங்க... முன்னாடி முதல்வரா இருந்த பன்னீரும், அதுக்கு ஒத்துக்கிட்டாரு...
''ஆனா, இதுல வர்ற கமிஷன் நின்னு போயிடிச்சேங்கற கோவத்துல, உணவுத் துறை உயர் மட்ட அதிகாரிகள், 'பருப்பு சப்ளை இல்லை'ன்னு கிளப்பி விட்டுட்டாங்க... எதிர்க்கட்சிகளும், உண்மையை தெரிஞ்சுக்காம, போராட்டம் எல்லாம் நடத்தினாங்க...
''மார்ச் மாசத்துலேர்ந்து, உளுத்தம் பருப்பை நிறுத்திவிட்டு, கனடா பருப்பு மட்டும் தான் தர்றாங்க... அடுத்த நாடகமா, 'இனி ரேஷனில்
உளுத்தம் பருப்பு கிடையாது'ன்னும் சொல்றாங்க... எல்லாரும் இந்த நாடகத்தைப் புரிஞ்சுக்கணும்ங்க...'' என்றார் அந்தோணிசாமி.''இதையெல்லாம் சரி செய்யலேன்னா, பழனிசாமி ஆட்சி கதை கந்தலாகிடும் ஓய்...'' என்றபடி, நடையைக் கட்டினார் குப்பண்ணா.
நண்பர்களும் பின் தொடர்ந்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • pranesh - tamilnadu

    தமிழ் நாட்டில் எதுவுமே நிலை இல்ல

  • chinnamanibalan - Thoothukudi,இந்தியா

    தமிழ்நாட்டில் இன்னும் பருவ மழை முழுமையாக பெய்யவில்லை.ஆனால் கமிஷன் காரணமாக போடப்பட்ட சாலைகள் அனைத்தும் சிதைந்து சீரழிந்து விட்டன. பல சாலைகள் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு முற்றிலும் லாயக்கற்றதாக மாறி,அதில் பயணம் செய்வோர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். தமிழகத்தின் தலைநகர் உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் இதே நிலைதான் உள்ளது. இதில் ஆட்சியாளர்களை மட்டும் குற்றம் கூறி பயனில்லை. அவர்களுக்கு வாக்களித்த மக்களைத்தான் குற்றம் கூற வேண்டும். கொஞ்சம் கூட மக்களை பற்றி கவலைப்படாமல், சாலைப்பணிகளில் கமிஷன் பெறுவோர் நாசமாகி போவார்கள் என்பது மட்டும் உறுதி.

  • vasumathi - Sydney,ஆஸ்திரேலியா

    Innoru kumbalukku thara vendiyadilleye. oozhal % konjam kuraikka vendiyathu thane ? DMK 10 % endral ADMK 5% than endru konjam makkal akkarai kollungal.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement