Advertisement

'டவுட்' தனபாலு

தி.மு.க., முதன்மை செயலர் துரைமுருகன்: புதிய ஆட்சியை, ஸ்டாலின் தருவார் என, மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.



டவுட் தனபாலு: புதிய ஆட்சின்னா, அ.தி.மு.க.,வுக்கு பதிலாக புது ஆட்சியையா... இல்லை, தி.மு.க., இதுவரை தந்திடாத புது ஆட்சியையா... 'புது மொந்தையில் பழைய கள்' என்பதைப் போல, ஸ்டாலின் புதிதாக முதல்வர் பதவியேற்றாலும், அவருக்கு கீழ் இருக்கும், மாவட்டங்களும், மந்திரிகளும் மாறிடவா போறாங்க என்ற, 'டவுட்' வருதே...!



காங்., செய்தித் தொடர்பாளர் குஷ்பு:
தமிழகத்தின் மிகச் சிறந்த தலைவர்களே, சினிமாவில் இருந்து வந்தவர்கள் தான். சினிமாவில் இருந்து வந்தவர்கள், மக்களுக்கு நல்லது செய்ய மாட்டார்கள் என, சொல்வது தவறு.



டவுட் தனபாலு: 'திராவிடக் கட்சிகளின் திரைப் பிரபலங்களின் பலத்தால்தான், தமிழகத்தில், காங்., ஆட்சியை இழந்தது... இனி, கட்சி பலமாகணும்னா, சினிமாவில் இருந்து வந்தவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கணும்னு, மனசுல இருக்குற ஆசையை, வெளிப்படையாக வெளிப்படுத்தினால் என்ன'ன்னு, யாரும், 'டவுட்' எழுப்பிடப் போறாங்க...!



தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார்:
இரட்டை இலையில், ஓர் இலையை பன்னீர்செல்வமாகவும், மற்றொரு இலையை பழனிசாமியாகவும் பார்க்கிறோம்.


டவுட் தனபாலு: 'எம்.ஜி.ஆரும், ஜெ.,வுமே, இரட்டை இலை'ன்னு, இத்தனை காலம் சொல்லி வந்தீங்க... இப்போ, அந்த இடத்தை, இவர்களுக்கு கொடுத்துட்டீங்களா... உணர்ச்சிகரமான பேச்சுக்கள் தான், உங்களுக்கு முதல் எதிரி என்பதை, எப்போது உணரப் போறீங்க என்பதுதான், என்னோட, 'டவுட்!'

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement