Advertisement

அக்கம் பக்கம்

நானா நோயாளி?-----


பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிக்காரர்கள் மீது, கடும் கோபத்தில் இருக்கிறார், பஞ்சாப் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, அமரீந்தர் சிங்.கடந்த லோக்சபா தேர்தலுக்கு பின் நடந்த, பெரும்பாலான மாநில சட்டசபை தேர்தல்களில், பா.ஜ., அபார வெற்றி பெற்றாலும், பஞ்சாப் மாநிலத்தில் மட்டும், அகாலி தளம் - பா.ஜ., கூட்டணியை பின்னுக்கு தள்ளி, காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.
இதை, காங்கிரசுக்கு கிடைத்த வெற்றி என்பதை விட, அமரீந்தர் சிங்கின் தனிப்பட்ட செல்வாக்கிற்கு கிடைத்த வெற்றியாகவே அனைவரும் கருதினர்.அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், அமரீந்தர் சிங்கிற்கு, பஞ்சாபில் செல்வாக்கு அதிகம். இந்திய ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர்.இப்படிப்பட்ட அமரீந்தர் சிங் தான், உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சியினர், சமீபத்தில் வதந்தியை பரப்பினர்.இந்த தகவலை கேள்விப்பட்ட அமரீந்தர் சிங், கோபத்தில் கொந்தளித்தார். தன் பேரனை காரில் ஏற்றி, அருகில் உள்ள, 'பேட்மின்டன்' கிளப்புக்கு சென்றார்.ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, பேரனுடன் பேட்மின்டன் விளையாடிய அமரீந்தர், அதை, வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து, 'பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.'இவ்வளவு ஆரோக்கியமாக இருக்கும் என்னையா, நோயாளி என்கிறீர்கள்?' என்றும், அவற்றில் பதிவிட்டார். இதற்கு பின் தான், அமரீந்தர் உடல்நிலை பற்றி பரவிய வதந்தி, முடிவுக்கு வந்தது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement