Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

விலைவாசி நம்பிக்கைகள்


சில நம்பிக்கைகளுக்கு, அறிவியல் பூர்வ ஆதாரங்கள் இருப்பதில்லை. திருக்கார்த்திகை,
கார்த்திகை மாதத்தில் எவ்வளவுக்கு தள்ளி வருகிறதோ, அந்தளவுக்கு
அந்தாண்டு வளமாக இருக்கும் என்பது நம்பிக்கை. உதாரணமாக கார்த்திகை 8ல் திருக்கார்த்திகை எனில், ரூபாய்க்கு 8 படி அரிசி என்ற அளவில் அந்த ஆண்டு விலைவாசி இருக்குமாம். திருக்கார்த்திகை இந்தாண்டு கார்த்திகை 16ம் தேதியே வருகிறது. இதனால்
இந்தாண்டு விலைவாசி நடுநிலைமையில் இருக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. கார்த்திகை 'சபரிமலை காலம்' என்பதால் காய்கறிகள், பழங்கள், தேங்காய்,
பூக்களின் விலை இயல்பாகவே உயர்ந்து விடும்.

தகவல் சுரங்கம்

கார்த்திகை மாத பழமொழிகள்


'கார்த்திகை மாதம் முருங்கைக் கீரை காம்பெல்லாம் நெய் வடியும்' எனும் பழமொழி உள்ளது. இந்தப் பழமொழியில் அந்தந்த வட்டாரத்தைப் பொறுத்து, கீரையின் பெயரும் மாறுபடுகிறது. 'கார்த்திகை கனமழை' என்பது, கார்த்திகை மாதத்தில் பெய்யும் மழையைக் குறிக்க வந்த
பழமொழி. 'கார்த்திகை காய்ந்தாலும் காயும், பெய்தாலும் பெய்யும்' என்னும் பழமொழி, மழை இல்லாத கார்த்திகை மாதத்தில் வந்த பழமொழியாக இருக்கலாம். 'கார்த்திகைக்கு பின் மழையும் இல்லை, கர்ணனுக்கு பின் கொடையும் இல்லை' என்ற பழமொழி, கார்த்திகை மாதம் மழை நிறைவு பெற்று குளிர் துவங்கும் என்பதைக் காட்டுகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement