Advertisement

புராதன சிற்பங்களின் காதலன் மதுஜெகதீஷ்


புராதன சிற்பங்களின் காதலன் மதுஜெகதீஷ்

மது ஜெகதீஷ்

பொள்ளாச்சியில் கடந்த 20 வருடங்களாக சாப்ட்வேர் கன்சல்டன்சி நடத்திவருபவர்.

இவருக்கு சந்தோஷம் தரக்கூடிய முக்கியமான விஷயம் புகைப்படம் எடுப்பது அதிலும் புராதன கோவில் சிற்பங்களை ரசித்து ரசித்து எடுப்பது.

இதற்காக இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டுள்ள இவரது படங்கள் பல உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடைபெற்ற கண்காட்சிகளில் இடம் பெற்று பாராட்டினை பெற்றுள்ளது.

சமீபத்தில் விக்கி நிறுவனம் நடத்திய புராதன சின்னங்கள் என்ற தலைப்பிலான புகைப்பட போட்டியில் பங்கேற்று இரண்டாவது பரிசினைப் பெற்றுள்ளார்.

இந்திய சிற்பங்களில் சிகை அலங்காரம் என்ற தலைப்பில் டில்லியில் இந்திய தொல்லியல்துறை நடத்திய புகைப்பட கண்காட்சியில் இவரது படங்கள் பலரது பாராட்டை பெற்றிருக்கிறது.

ஒரு தேர்ந்த புகைப்படக்கலைஞரின் கண்ணோட்டத்தில் இவர் சிற்பங்களை படமெடுப்பதால், சிற்பம் தராத உணர்வையும் அழகையும் இவரது படங்கள் தருகிறது.நாம் பார்த்த சிற்பங்கள்தானா இது? என்று அடுத்த முறை அதே சிற்பத்தை ஆழமாக பார்க்கும்படியான உணர்வினை இவரது படங்கள் தருகிறது.

இன்னோரு சிறப்பு கம்ப ராமாயணத்தையும், திவ்யபிரபந்தத்தையும் இவர் தனது படங்களுக்கு ஏற்ப முகநுாலில் பயன்படுத்தி படங்களுடன் அந்த பாடல்களையும் பதிவு செய்வதால் இவரது படங்கள் இன்னும் தனித்துவம் பெறுகிறது.

அவரது முகநுால் லிங்க்
www.facebook.com/madhujagdhishsculptureenthusiast/

இந்தியாவில் உள்ள புராதன சின்னங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானவை இதன் பெருமையை வெளிநாட்டினர் உணர்ந்த அளவு நம்மவர்கள் இன்னும் உணரவில்லை.சிற்பங்களை சிதைப்பது அதன் மேல் கிறுக்குவது என்று பலவிதங்களில் சேதப்படுத்துகின்றனர்.சிற்பத்தில் இருந்து உடைக்கப்படும் ஒரு விரலைக்கூட நம்மால் ஒட்டவைக்கமுடியாது ஒவ்வொன்றும் விலை மதிக்கமுடியாத பொக்கிஷம்.அடுத்தடுத்து வரும் தலைமுறைகள் பார்த்து ரசிக்கவேண்டிய கலையம்சம்.

இதன் அருமைகருதி கல்லுாரி பள்ளிகளில் விழிப்புணர்வு முகாம் நடத்தவும் ஆர்வமுள்ள இளைய தலைமுறையினருக்கு புராதனை சின்னங்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துப் போய் அதன் பெருமைகளை விளக்கவும் இவரிடம் ஆர்வமும் திட்டமும் இருக்கிறது, காலம்தான் இந்த புராதன சிற்பங்களின் காதலருக்கு கைகொடுக்க வேண்டும்.

இவருடன் பேசுவதற்காக எண்:Mobile : 94864 11113.

எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • thiru - Chennai,இந்தியா

  வாழ்த்துக்கள் திரு மது அவர்களே உங்கள் விழிப்புணர்வு சேவை மென்மேலும் சிறக்கவும் வெற்றியடையவும் எனது வாழ்த்துக்கள்...

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  கலை பொக்கிஷங்கள் கோவிலில், ஆன்மிகம் என்ற அறியாமையில் எண்ணெயில் முங்கி, சாம்பலும், சிகப்பும் பூசப்பட்டு தீபத்தின் கருப்பேற்றி, அபிஷேகமென்று சாக்கடை குட்டையாக்கி, உண்டியல் வைத்து அசிங்கமான நிலையில் உள்ளன. பக்தி மூர்க்கமாகி பகல் வேஷமாகி போன காலமிது. கல்லிலே நளினம், இன்பம், துன்பம், பயம், கோபம், சாந்தம், பாசம், குறும்பு, பாவம், புண்ணியம், ஆத்திரம், ரௌத்திரம் காதல், காமம், பக்தி என்று கலை நயங்களை படைத்தவர்கள் இதை கண்டால் தாங்களாகவே கழுவில் ஏறி கொள்வார்கள்.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  இது திருக்கோவிலூர் கோவில் வெளி மதில் வாசலில் உள்ள சிற்பம் போல தெரிகிறது.

 • Muruganandan - Tirupur,இந்தியா

  Excellent .... excellent.. keep it up your journey.. Pride of TN...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement