Advertisement

புராதன சின்னங்களை போற்றும் விக்கி நிறுவனம்


புராதன சின்னங்களை போற்றும் விக்கி நிறுவனம்.

புகழ் பெற்ற தகவல் களஞ்சிய நிறுவனமான விக்கி நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள புராதன சின்னங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.இதன் நோக்கம் நமது தொன்மை கலாச்சாரங்கள் பாதுகாக்கப்படுவதுடன் போற்றப்படவேண்டும் என்பதற்காகவே.இதை வலியுறுத்தும் வகையில் கடந்த 2012 ம் ஆண்டு முதல் புகைப்பட போட்டியினை நடத்திவருகிறது.

நாடு வாரியாக தேர்வு செய்யப்படும் சிறந்த படங்களை அந்தந்ந நாட்டின் தலைப்பு கொடுத்து வெளியிட்டுள்ளது.இதில் நமது இந்தியாவில் இருந்து பத்து படங்கள் இந்த ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த பத்து படங்களை முறையே பி.கரோட்,மது ஜெக்தீஷ்,,மானோஜ் அம்பேத்கர்,சாமு சக்ரபர்த்தி,அமித் நிமேட்,சிவாஜிதேசாய்,ஜெய்சுவாய்,சதுர்ப தத்தா,கேஷினி கரோனா,ஆகியோர் எடுத்துள்ளனர்.

படங்கள் கன்னியாகுமரி,பதாமி,கோனார்க் கோவில் மற்றும் கர்நாடகாவில் உள்ள சில இடங்களில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் வருங்காலத்தில் நீங்களும் பங்கேற்கலாம் இது பற்றிய முழு விவரத்திற்கு கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://commons.wikimedia.org/wiki/Commons:Wiki_Loves_Monuments_2017_in_India

விக்கி நிறுவனத்திற்கு நன்றி!

எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement