Advertisement

எதிர்ப்பால் இழந்தோம் தரமான கல்வியை!

கடந்த, 1937ல் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, தென் மாநிலத்தவர்கள், வட மாநிலங்களில் வேலை தேட அல்லது தொழில் செய்ய, ஹிந்தி மொழி தெரிந்திருக்க வேண்டிய அவசியத்தை, தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்தார், தீர்க்கதரிசி ராஜாஜி.
வெற்றி பெற்று, முதல்வராக பொறுப்பேற்றவுடன், 1938 ஜூனில், ஆறாம் வகுப்பு முதல் ஹிந்தி கட்டாய பாடமாக கொண்டு வந்தார். அது மட்டுமல்ல, 'ஹிந்தியில் தேர்ச்சி பெற்றால் தான், அடுத்த வகுப்புக்கு செல்ல முடியும்' என்றும் அறிவித்தார்
இந்த அறிவிப்பை, எதிர்க்கட்சியான நீதிக்கட்சி எதிர்த்தது. முதல், 'ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு' திருச்சியில் நடைபெற்றது. தமிழறிஞர் மறைமலை அடிகள், பாவேந்தர் பாரதிதாசன் மற்றும் முத்தமிழ் காவலர், கி.ஆ.பெ. விஸ்வநாதன் ஆகியோர் மாநாட்டில் முழக்கமிட்டனர்.
இதைத் தொடர்ந்து, சென்னையில், ஈ.வெ.ரா., தலைமையில் போராட்டங்களும், பேரணிகளும் நடைபெற்றன. டிச.,3 ஹிந்தி எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்பட்டது.
நாடு சுதந்திரம் பெற்றவுடன், 'இந்தியக் குடியரசின் அலுவல் மொழியாக, ஏன் ஆங்கிலம் இருக்க வேண்டும்...' என்ற கேள்வி எழுந்தது. நீண்ட விவாதத்திற்கு பின், தேவநாகரி எழுத்துருவில் அமைந்த ஹிந்தி, அரசுப்பணி மொழியாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஜன., 26, 1950ல், இந்தியா குடியரசு நாடாக ஏற்றுக் கொள்ளப்பட்ட போது, உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தில், 'அடுத்த, 15 ஆண்டுகளுக்கு, ஆங்கிலம் இணை அலுவலக மொழியாக விளங்கும்; அதன் பின், ஹிந்தி மொழி மட்டுமே அரசுப்பணிகளில் பயன்படுத்தப்படும்' என, எழுதப்பட்டது.
இந்த முடிவு, ஹிந்தி பேசாத மாநிலங்களில் மீண்டும் எதிர்ப்பலைகளை உண்டாக்கின. பெரும்பாலான மக்கள் பேசும் மொழி, ஹிந்தி மட்டுமே என்ற எதிர்வாதம் வந்த போது, 'அப்படியாயின் காகம் அல்லவா, தேசியப் பறவையாக இருத்தல் வேண்டும்... ஏன் மயிலை தேர்ந்தெடுத்தீர்கள்...' என, கேலியாக குறிப்பிட்டார், அண்ணாதுரை.
எதிர்ப்பை தணிக்க, அப்போதைய பிரதமர் நேரு, '1975க்கு பிறகும், ஆங்கிலம் அரசுப்பணி இணை மொழியாக விளங்கும்' என, வாய்மொழி உறுதி தந்தார். அப்போதும், ஹிந்தியை அவர் அறவே விட்டுக் கொடுக்கவில்லை. 1965, ஜன., 26 நெருங்கிய போது, தமிழகத்தில், ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் வலுக்கத் துவங்கியது.
குடியரசு நாளை, கருப்பு தினமாக கொண்டாட, தி.மு.க., அழைப்பு விடுத்திருந்தது. போராட்டத்தில் மீண்டும் மாணவர்கள் பெருமளவில் ஈடுபட்டனர். மதுரையில் துவங்கி, தமிழகம் எங்கும் பரவிய போராட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
தீ வைப்பு, துப்பாக்கி சூடு என, இரண்டு மாதங்கள் நடைபெற்ற தொடர் போராட்டத்தில், 70 பேர் இறந்தனர். நிலைமையை கட்டுப்படுத்த, அப்போதைய பிரதமர் லால் பகதுார் சாஸ்திரி, 'ஹிந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை, ஆங்கிலமும், அரசுப்பணிகளில் இணைமொழியாக இருக்கும்' என, உறுதி தந்தார்; போராட்டமும் தணிந்தது.
ஹிந்தியை அவர் இந்த நிலையிலும், விட்டு கொடுக்கவில்லை.
கடந்த, 1965 - 66ல் கூடிய, 'தேசிய பல்கலைக்கழக கல்வி கமிஷன்' மும்மொழி பாடத்திட்டத்தை பரிந்துரைத்தது. அதில், 'ஒவ்வொரு இந்திய மாணவனும், பிராந்திய மொழியை படிக்க வேண்டும். அதே நேரத்தில், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும்' என்றது.
இந்த பரிந்துரை, பார்லிமென்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கடந்த, 1967ல் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, தி.மு.க., ஆட்சியை கைப்பற்றியது; அண்ணாதுரை முதல்வர் ஆனார். எல்லா மாநிலங்களும் ஏற்றுக் கொண்ட போதிலும், அண்ணாதுரை மும்மொழி திட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
தமிழகத்தில் இரு மொழி திட்டத்தை அறிவித்தார். அதே ஆண்டு, இந்திய பிரதமராக பொறுப்பேற்ற இந்திரா, 'அரசுப்பணி மொழியாக ஹிந்தியும், ஆங்கிலமும் என்றென்றும் இருக்கும்' என, சட்டத்திருத்தமே செய்தார்.
அண்ணாதுரை, இரு மொழிக்கொள்கையை அறிவித்த போது, எந்த இரு மொழிகள் என, தெளிவுபடுத்தவில்லை. விளைவு, பல மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆங்கிலத்தை, முதல் மொழியாகவும், ஹிந்தியை இரண்டாம் மொழியாகவும் போதிக்கத் துவங்கின.
ஆனால், தமிழை மூன்றாவது மொழியாக சொல்லித்தரவில்லை. காரணம், இரு மொழிப் பாடத்திட்டம். இதனால், 45 ஆண்டுகளாக, தாய் மொழியான தமிழை கற்காமல், எல்.கே.ஜி., முதல் முதுகலை பட்டம் வரை கற்கும் நிலை தமிழகத்தில் மட்டுமே உருவானது.
மத்திய அரசு நடத்தும், 'கேந்திரிய வித்யாலயா' பள்ளிகளுக்கும், தனியார் நடத்தும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும், 'தமிழை இரண்டாவது மொழியாக பயிற்றுவிக்க வேண்டும்' என்ற கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை.
இதனால், இன்று, தமிழகத்திலுள்ள, 45 கேந்திர வித்யாலயா பள்ளிகளிலும், 750 சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும், ஒரு சிலவற்றை தவிர, தமிழ், மூன்றாவது மொழியாக கூட சொல்லித் தரப்படுவதில்லை.
தமிழ் கற்றல் சட்டம், 1996ல் வந்த பிறகும், தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஹிந்தி கற்பிக்கப்படும் போது, நவோதயா பள்ளிகளுக்கு மட்டும் அனுமதியில்லை என, தமிழக அரசு பிடிவாதம் பிடித்தது.
'வறுமை கோட்டிற்கு கீழே இருக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும், உலகத்தரம் வாய்ந்த பள்ளிக்கல்வி, மிக குறைந்த செலவில் வழங்க வேண்டும்' என்ற உயரிய நோக்கத்தோடு, காங்கிரசை சேர்ந்த, முன்னாள் பிரதமர் ராஜிவ், 1985ல், நவோதயா பள்ளிகளை துவக்கினார்.
இப்பள்ளிகள், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், தன்னாட்சி நிறுவனமாக திகழ்கிறது. ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, சி.பி.எஸ்.இ., முறையில் நடத்தப்படும், இந்த குடியிருப்பு பள்ளிகளின் சிறப்புகள் பல.
அவற்றை அப்போதைய மாணவர்கள் அறிந்திருந்தால், தமிழக அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி, நவோதயா பள்ளிகளை மாநிலம் முழுவதும் துவக்க செய்திருப்பர்.
ஹிந்தி எதிர்ப்பு என்ற மூளைச்சலவையால், உண்மையை அறிய விடாமல், மாணவர்கள் மழுக்கடிக்கப்பட்டனர், சில அரசியல் கட்சிகளால்.
* கிராமப்புறங்களில், 30 ஏக்கரில், இப்பள்ளிகள் நிறுவப்படும். இட நெருக்கடி, துாசி, மாசு இருக்காது. உள்கட்டமைப்பு தாராளமாக இருக்கும்
* மாணவர், மாணவியர், ஆசிரியர் மற்றும் அலுவலர், பள்ளி வளாகத்திலேயே தங்க, தனித்தனிக் குடியிருப்புகள் இருக்கும்
* கைத்திறன்களை மேம்படுத்தவும், கலையை ஊக்குவிக்கவும் உள் அரங்குகள்
* உடற்பயிற்சி செய்ய, நவீன கூடங்கள்
* நடனம், இசை, பேச்சு மற்றும் இதர போட்டிகளுக்கான தாராள வாய்ப்பு
* உள் விளையாட்டு அரங்குகள்
* கால் பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கான வெளி மைதானங்கள்
* தினமும் இரண்டு மணி நேரம், மாணவர்களுக்கு விளையாட்டு கட்டாயம்
* ஆண்டுதோறும் நடத்தப்படும் அறிவியல் காங்கிரஸ் கண்காட்சியுடன், இயற்பியல், வேதியல் மற்றும் கணித பாடங்களுக்கான கண்காட்சிகள்
* 6, 7 மற்றும் 8 வகுப்புகள் வரை கல்வி கட்டணம் கிடையாது
* 9, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மாதம், 200 ரூபாய் தான் கட்டணம்; மாணவியருக்கு கட்டணம் கிடையாது
* மாணவ, மாணவியர் தங்கும் விடுதிக்கு கட்டணமில்லை
* உணவு, பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், எழுது உபகரணங்கள் மற்றும் சீருடை இலவசம்
* வீட்டுக்கு சென்று திரும்பும் போக்குவரத்து செலவும், மாணவர்களுக்கு வழங்கப்படும்.
நவோதயா பள்ளிகளின் தனிச்சிறப்பு என்னவெனில், ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவியரை, ஓராண்டுக்கு இடப்பெயர்வு செய்து, வேறொரு மாநிலத்திலிருக்கும், மற்றொரு நவோதயா பள்ளிக்கு மாற்றுவர்.
அங்கும், அந்த மாணவர், தான் படித்த, அதே மொழியில் தான் பயிலுவார். இவ்வகை இடப்பெயர்வால், அம்மாநிலத்து மாணவர்களை நண்பர்களாக கொள்வது மட்டுமின்றி, அந்த மாநில கலாசாரத்தையும் மாணவ, மாணவியர் புரிந்து கொள்வர்.
'இத்தனையும் உண்மையாக...' என, ஆச்சரியப்படுகிறீர்களா?
ஆம், உண்மை தான்.
இத்தனை சிறப்பு கொண்ட நவோதயா பள்ளிகள், தமிழகத்தில் ஏன் இல்லை? தமிழக அரசும், எதிர்க்கட்சிகளும், போலியான ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டதே காரணம்.
நவோதயா பள்ளிகளில், ஹிந்தி முதல் மொழியாக தான், முதலில் இருந்தது. ஹிந்தி அல்லாத மாநிலமான, மேற்கு வங்கம் மற்றும் கேரளா எதிர்ப்பு தெரிவித்தன.
அதன் பிறகு, ஹிந்தி பேசாத மாநிலங்களில், 6 முதல், 10ம் வகுப்பு வரை, முதல் மொழி மாநில மொழி; இரண்டாவது ஆங்கிலம்; மூன்றாவது ஹிந்தி என, மாற்றப்பட்டது.
உடனே, மேற்கு வங்கமும், கேரளாவும் தங்கள் பிடிவாதத்தை விட்டுக்கொடுத்து, நவோதயா பள்ளிகளை திறந்தன. தமிழக அரசு, எதிர்ப்பை தொடர்ந்து, நம் மாணவர்களின் எதிர்காலத்தை பாழடித்தது.
நவோதயா பள்ளிகள் துவங்கிய நாள் முதல், இப்போது வரை, 75 சதவீத இடம், கிராமப்புற மாணவ, மாணவியருக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும், மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த, 32 ஆண்டுகளாக, நவோதயா பள்ளிகளை தடை செய்து, கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல கல்வி, அதுவும், 10ம் வகுப்பு வரை தாய்மொழியில் கற்கும் வாய்ப்பை கொடுக்காதது, துரோகம் தானே!
நல்லவற்றை கூட, நாம் போராடி தான் பெற வேண்டிய நிலை, நம் மாநிலத்தில் நிலவுகிறது.
மதுரை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட, கல்வி தொடர்பான பொது நல வழக்கில், 'தமிழக அரசு, 30 ஏக்கர் நிலம் கொடுத்தால், பள்ளி கட்டமைப்புக்கு என, ஒவ்வொரு பள்ளிக்கும், 30 கோடி ரூபாய் ஒதுக்கி, அடுத்த கல்வி ஆண்டே, 30 பள்ளிகளை துவக்க தயார்' என, மத்திய அரசு கூறியது.
அப்போதும், 'நாங்கள் அமைச்சரவையை கூட்டி தான் முடிவு செய்வோம்' என, வாதிட்டது, நம் தமிழக அரசு.
மாண்புமிகு நீதிபதிகள், கே.கே.சசிதரன் மற்றும் ஜி.ஆர்.சுவாமிநாதன், தமிழக அரசின் வாதத்தை ஏற்காமல், 'அடுத்த, எட்டு வாரங்களுக்குள் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும்' என, உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தமிழக அரசு மேல்முறையீடு செய்யலாம்; எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து போராடலாம். அவர்களின் போராட்டத்தை யார் எதிர்கொள்வது?
நம் வீர விளையாட்டான, ஜல்லிக்கட்டை போராடி, மீட்டுத்தந்த இளைஞர்கள் தான் இதை எதிர்கொள்ள வேண்டும். அவர்களுக்கு தான் ஹிந்தி படிக்காததால் ஏற்பட்ட வலியும், இழப்பும் புரியும்.
இ - மெயில்: atbbose@gmail.com
டந்த, 1937ல் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, தென் மாநிலத்தவர்கள், வட மாநிலங்களில் வேலை தேட அல்லது தொழில் செய்ய, ஹிந்தி மொழி தெரிந்திருக்க வேண்டிய அவசியத்தை, தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தார், தீர்க்கதரிசி ராஜாஜி.
வெற்றி பெற்று, முதல்வராக பொறுப்பேற்றவுடன், 1938 ஜூனில், ஆறாம் வகுப்பு முதல், ஹிந்தி கட்டாய பாடமாக கொண்டு வந்தார். அது மட்டுமல்ல, 'ஹிந்தியில் தேர்ச்சி பெற்றால் தான், அடுத்த வகுப்புக்கு செல்ல முடியும்' என்றும் அறிவித்தார்.
இந்த அறிவிப்பை, எதிர்க்கட்சியான நீதிக்கட்சி எதிர்த்தது. முதல், 'ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு' திருச்சியில் நடைபெற்றது. தமிழறிஞர் மறைமலை அடிகள், பாவேந்தர் பாரதிதாசன் மற்றும் முத்தமிழ் காவலர், கி.ஆ.பெ.விஸ்வ நாதன் ஆகியோர் மாநாட்டில் முழக்கமிட்டனர்.
இதைத் தொடர்ந்து, சென்னையில், ஈ.வெ.ரா., தலைமையில் போராட்டங்களும், பேரணிகளும் நடைபெற்றன. டிச., 3 ஹிந்தி எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்பட்டது.
நாடு சுதந்திரம் பெற்றவுடன், 'இந்தியக் குடியரசின் அலுவல் மொழியாக, ஏன் ஆங்கிலம் இருக்க வேண்டும்...' என்ற கேள்வி எழுந்தது. நீண்ட விவாதத்திற்கு பின், தேவநாகரி எழுத்துருவில் அமைந்த ஹிந்தி, அரசுப்பணி மொழியாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்
ஜன., 26, 1950ல், இந்தியா குடியரசு நாடாக ஏற்றுக் கொள்ளப்பட்ட போது, உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தில், 'அடுத்த, 15 ஆண்டுகளுக்கு, ஆங்கிலம் இணை அலுவலக மொழியாக விளங்கும்; அதன் பின், ஹிந்தி மொழி மட்டுமே அரசுப்பணிகளில் பயன்படுத்தப்படும்' என, எழுதப்பட்டது.
இந்த முடிவு, ஹிந்தி பேசாத மாநிலங்களில் மீண்டும் எதிர்ப்பலைகளை உண்டாக்கின. பெரும்பாலான மக்கள் பேசும் மொழி, ஹிந்தி மட்டுமே என்ற எதிர்வாதம் வந்த போது, 'அப்படியாயின் காகம் அல்லவா, தேசியப் பறவையாக இருத்தல் வேண்டும்... ஏன் மயிலை தேர்ந்தெடுத்தீர்கள்...' என, கேலியாக குறிப்பிட்டார், அண்ணாதுரை.
எதிர்ப்பை தணிக்க, அப்போதைய பிரதமர் நேரு, '1975க்கு பிறகும், ஆங்கிலம் அரசுப்பணி இணை மொழியாக விளங்கும்' என, வாய்மொழி உறுதி தந்தார். அப்போதும், ஹிந்தியை அவர் அறவே விட்டுக் கொடுக்கவில்லை. 1965, ஜன., 26 நெருங்கிய போது, தமிழகத்தில், ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் வலுக்கத் துவங்கியது.
குடியரசு நாளை, கறுப்பு தினமாக கொண்டாட, தி.மு.க., அழைப்பு விடுத்திருந்தது. போராட்டத்தில் மீண்டும் மாணவர்கள் பெருமளவில் ஈடுபட்டனர். மதுரையில் துவங்கி, தமிழகம் எங்கும் பரவிய போராட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
தீ வைப்பு, துப்பாக்கிச் சூடு என, இரண்டு மாதங்கள் நடைபெற்ற தொடர் போராட்டத்தில், 70 பேர் இறந்தனர். நிலைமையை கட்டுப்படுத்த, அப்போதைய பிரதமர் லால் பகதுார் சாஸ்திரி, 'ஹிந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை, ஆங்கிலமும், அரசுப்பணிகளில் இணை மொழியாக இருக்கும்' என, உறுதி தந்தார்; போராட்டமும் தணிந்தது.
ஹிந்தியை அவர் இந்த நிலையிலும், விட்டு கொடுக்கவில்லை.
கடந்த, 1965 - 66ல் கூடிய, 'தேசிய பல்கலைக்கழக கல்வி கமிஷன்' மும்மொழி பாடத்திட்டத்தை பரிந்துரைத்தது. அதில், 'ஒவ்வொரு இந்திய மாணவனும், பிராந்திய மொழியை படிக்க வேண்டும். அதே நேரத்தில், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும்' என்றது.
இந்த பரிந்துரை, பார்லிமென்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கடந்த, 1967ல் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, தி.மு.க., ஆட்சியை கைப்பற்றியது; அண்ணாதுரை முதல்வர் ஆனார். எல்லா மாநிலங்களும் ஏற்றுக் கொண்ட போதிலும், மும்மொழி திட்டத்தை அண்ணாதுரை ஏற்றுக் கொள்ளவில்லை.
தமிழகத்தில் இரு மொழி திட்டத்தை அறிவித்தார். அதே ஆண்டு, இந்திய பிரதமராக பொறுப்பேற்ற இந்திரா, 'அரசுப்பணி மொழியாக ஹிந்தியும், ஆங்கிலமும் என்றென்றும் இருக்கும்' என, சட்டத்திருத்தமே செய்தார்.
இரு மொழிக் கொள்கையை அண்ணாதுரை அறிவித்த போது, எந்த இரு மொழிகள் என, தெளிவுபடுத்தவில்லை. விளைவு, பல மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஆங்கிலத்தை முதல் மொழியாகவும், ஹிந்தியை இரண்டாம் மொழியாகவும் போதிக்கத் துவங்கின.
ஆனால், தமிழை மூன்றாவது மொழியாக சொல்லித்தரவில்லை. காரணம், இரு மொழிப் பாடத்திட்டம். இதனால், 45 ஆண்டுகளாக, தாய் மொழியான தமிழை கற்காமல், எல்.கே.ஜி., முதல் முதுகலை பட்டம் வரை கற்கும் நிலை தமிழகத்தில் மட்டுமே உருவானது.
மத்திய அரசு நடத்தும், 'கேந்திரிய வித்யாலயா' பள்ளிகளுக்கும், தனியார் நடத்தும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும், 'தமிழை இரண்டாவது மொழியாக பயிற்றுவிக்க வேண்டும்' என்ற கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை.
மூளைச்சலவை
இதனால், இன்று, தமிழகத்திலுள்ள, 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும், 750 சி.பி.எஸ்.இ., பள்ளி களிலும், ஒரு சிலவற்றை தவிர, தமிழ், மூன்றாவது மொழியாக கூட சொல்லித் தரப்படுவதில்லை.
தமிழ் கற்றல் சட்டம், 1996ல் வந்த பிறகும், தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஹிந்தி கற்பிக்கப்படும் போது, நவோதயா பள்ளிகளுக்கு மட்டும் அனுமதியில்லை என, தமிழக அரசு பிடிவாதம் பிடித்தது.
'வறுமை கோட்டிற்கு கீழே இருக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும், உலகத்தரம் வாய்ந்த பள்ளிக்கல்வி, மிக குறைந்த செலவில் வழங்க வேண்டும்' என்ற உயரிய நோக்கத்தோடு, காங்கிரசை சேர்ந்த, முன்னாள் பிரதமர் ராஜிவ், 1985ல், நவோதயா பள்ளிகளை துவக்கினார்.
இப்பள்ளிகள், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், தன்னாட்சி நிறுவனமாக திகழ்கிறது. ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, சி.பி.எஸ்.இ., முறையில் நடத்தப்படும், இந்த குடியிருப்பு பள்ளிகளின் சிறப்புகள் பல.
அவற்றை அப்போதைய மாணவர்கள் அறிந்திருந்தால், தமிழக அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி, நவோதயா பள்ளிகளை மாநிலம் முழுவதும் துவக்க செய்திருப்பர்.
ஹிந்தி எதிர்ப்பு என்ற மூளைச்சலவையால், உண்மையை அறிய விடாமல், மாணவர்கள் மழுக்கடிக்கப்பட்டனர், சில அரசியல் கட்சிகளால்.
 கிராமப்புறங்களில், 30 ஏக்கரில், இப்பள்ளிகள் நிறுவப்படும். இட நெருக்கடி, துாசி, மாசு இருக்காது. உள்கட்டமைப்பு தாராளமாக இருக்கும்
 மாணவ - மாணவியர், ஆசிரியர் மற்றும் அலுவலர், பள்ளி வளாகத்திலேயே தங்க, தனித்தனிக் குடியிருப்புகள் இருக்கும்
 கைத்திறன்களை மேம்படுத்தவும், கலையை ஊக்குவிக்கவும் உள் அரங்குகள்
 உடற்பயிற்சி செய்ய, நவீன கூடங்கள்
 நடனம், இசை, பேச்சு மற்றும் இதர போட்டிகளுக்கான தாராள வாய்ப்பு
 உள் விளையாட்டு அரங்குகள்
 கால் பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கான வெளி மைதானங்கள்
 தினமும் இரண்டு மணி நேரம், மாணவர்களுக்கு விளையாட்டு கட்டாயம்
 ஆண்டுதோறும் நடத்தப்படும் அறிவியல் காங்கிரஸ் கண்காட்சியுடன், இயற்பியல், வேதியியல் மற்றும் கணித பாடங்களுக்கான கண்காட்சிகள்
 6, 7 மற்றும் 8ம் வகுப்புகள் வரை கல்வி கட்டணம் கிடையாது
 9, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மாதம், 200 ரூபாய் தான் கட்டணம்; மாணவியருக்கு கட்டணம் கிடையாது
 மாணவ - மாணவியர் தங்கும் விடுதிக்கு கட்டணமில்லை
 உணவு, பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், எழுது உபகரணங்கள் மற்றும் சீருடை இலவசம்
 வீட்டுக்கு சென்று திரும்பும் போக்குவரத்து செலவும், மாணவர் களுக்கு வழங்கப்படும்.
நவோதயா பள்ளிகளின் தனிச்சிறப்பு என்னவெனில், ஒன்பதாம் வகுப்பு மாணவ - மாணவியரை, ஓராண்டுக்கு இடப்பெயர்வு செய்து, வேறொரு மாநிலத்திலிருக்கும், மற்றொரு நவோதயா பள்ளிக்கு மாற்றுவர்.
அங்கும், அந்த மாணவர், தான் படித்த, அதே மொழியில் தான் பயிலுவார். இவ்வகை இடப்பெயர்வால், அம்மாநிலத்து மாணவர்களை நண்பர்களாக கொள்வது மட்டுமின்றி, அந்த மாநில கலாசாரத்தையும் மாணவ - மாணவியர் புரிந்து கொள்வர்.
'இத்தனையும் உண்மையாக...' என, ஆச்சரியப்படுகிறீர்களா?
ஆம், உண்மை தான்.
இத்தனை சிறப்பு கொண்ட நவோதயா பள்ளிகள், தமிழகத்தில் ஏன் இல்லை? தமிழக அரசும், எதிர்க்கட்சி களும், போலியான ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டதே காரணம்.
நவோதயா பள்ளிகளில், ஹிந்தி முதல் மொழியாக தான், முதலில் இருந்தது. ஹிந்தி அல்லாத மாநிலமான, மேற்கு வங்கம் மற்றும் கேரளா எதிர்ப்பு தெரிவித்தன.
அதன் பிறகு, ஹிந்தி பேசாத மாநிலங்களில், 6 முதல், 10ம் வகுப்பு வரை, முதல் மொழி மாநில மொழி; இரண்டாவது ஆங்கிலம்; மூன்றாவது ஹிந்தி என, மாற்றப்பட்டது.
உடனே, மேற்கு வங்கமும், கேரளாவும் தங்கள் பிடிவாதத்தை விட்டுக்கொடுத்து, நவோதயா பள்ளிகளை திறந்தன. தமிழக அரசு, எதிர்ப்பை தொடர்ந்து, நம் மாணவர்களின் எதிர்காலத்தை பாழடித்தது.
துரோகம்
நவோதயா பள்ளிகள் துவங்கிய நாள் முதல், இப்போது வரை, 75 சதவீத இடம், கிராமப்புற மாணவ, மாணவியருக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும், மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த, 32 ஆண்டுகளாக, நவோதயா பள்ளிகளை தடை செய்து, கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல கல்வி, அதுவும், 10ம் வகுப்பு வரை தாய்மொழியில் கற்கும் வாய்ப்பை கொடுக்காதது, துரோகம் தானே!
நல்லவற்றை கூட, நாம் போராடி தான் பெற வேண்டிய நிலை, நம் மாநிலத்தில் நிலவுகிறது.
மதுரை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட, கல்வி தொடர்பான பொது நல வழக்கில், 'தமிழக அரசு, 30 ஏக்கர் நிலம் கொடுத்தால், பள்ளி கட்டமைப்புக்கு என, ஒவ்வொரு பள்ளிக்கும், 30 கோடி ரூபாய் ஒதுக்கி, அடுத்த கல்வி ஆண்டே, 30 பள்ளிகளை துவக்க தயார்' என, மத்திய அரசு கூறியது.
அப்போதும், 'நாங்கள் அமைச்சரவையை கூட்டி தான் முடிவு செய்வோம்' என, வாதிட்டது, நம் தமிழக அரசு.
மாண்புமிகு நீதிபதிகள், கே.கே.சசிதரன் மற்றும் ஜி.ஆர்.சுவாமிநாதன், தமிழக அரசின் வாதத்தை ஏற்காமல், 'அடுத்த, எட்டு வாரங்களுக்குள் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும்' என, உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தமிழக அரசு மேல்முறையீடு செய்யலாம்; எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து போராடலாம். அவர்களின் போராட்டத்தை யார் எதிர்கொள்வது?
நம் வீர விளையாட்டான, ஜல்லிக் கட்டை போராடி, மீட்டுத்தந்த இளைஞர்கள் தான் இதை எதிர்கொள்ள வேண்டும். அவர்களுக்கு தான் ஹிந்தி படிக்காததால் ஏற்பட்ட வலியும், இழப்பும் புரியும்.

- ஆ.த.பா.போஸ்
சமூக ஆர்வலர்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement