Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

மணமுறிவுக்கு காரணம்


கரு உருவாகாமல் தடுக்கும் கருத்தடை மாத்திரைக்கு, மறுபக்கங்களும் உள்ளன என்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. கருத்தடை மாத்திரையில் உள்ள ஹார்மோன்கள், பெண்களுக்கு தங்கள் கணவர் மீதான ஈர்ப்பை அதிகப்படுத்துகின்றன. கருத்தடை மாத்திரையை நிறுத்தியவுடன், இந்த ஈர்ப்பு குறைகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகமாகின்றனவாம். இதனால் மண வாழ்க்கை முறிவிற்கும், இதற்கும் தொடர்புகள் இருக்கலாம் என ஸ்டர்லிங் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தகவல் சுரங்கம்

தீக் ஷாபூமி எக்ஸ்பிரஸ்


இந்தியாவின் அரசியல் சாசன சிற்பி அம்பேத்கர், ஆயிரக்கணக்கானோருடன் 1956 அக்டோபரில், இந்து சமயத்தில் இருந்து புத்த சமயத்திற்கு மாறினார். இந்தியாவின் சமய வரலாற்றில் முக்கியமான இந்த நிகழ்வு நாக்பூரில் நடந்தது. இந்த நிகழ்வு நடந்த இடம் தீக் ஷாபூமி என பெயரிடப்பட்டது. பவுத்த சமயத்தினரின் புனித தலமாக தீக் ஷா பூமி உள்ளது. இங்கு மிகப் பெரிய ஸ்துாபி கட்டப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே 'தீக் ஷாபூமி' உள்ள நாக்பூருக்கும், பீகாரில் உள்ள புத்தர் ஞானம் பெற்ற கயாவுக்கும் இடையே ஓடும் ரயிலுக்கு 'தீக் ஷாபூமி எக்ஸ்பிரஸ்' என பெயர் சூட்டியுள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement