Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

'கைரேகை' பிரச்னைகள்


முகத்தில் எண்ணெய் வழிகிறது என்கிறோம். எண்ணெய் சருமம் என்று சொல்கிறோம். நமது ரேகைகளில் இருந்தும் கண்ணுக்குத் தெரியாத வகையில் ஓர் எண்ணெய் வெளிவருகிறது. இந்த எண்ணெய்க்கு செபம் என்று பெயர். இந்த எண்ணெய் தான் ரூபாய் நோட்டுகளில் படிகிறது. ரூபாய் நோட்டுகளில் படிந்து பின்பு ஆக்சிஜனேற்றம் அடைந்து மஞ்சள் நிறத்தினை அடைகிறது.ரூபாய் நோட்டுகள் பழசாக மாற இந்த கைரேகை எண்ணெயே காரணம். செபம் எண்ணெயை நீக்குவதன் மூலமாக பழைய ரூபாய் தாளை, புது ரூபாய் தாளாக மாற்ற முடியும்.

தகவல் சுரங்கம்

இந்தியாவின் சிவப்பு மாநிலம்


இமயமலையின் கிழக்குப்பகுதியில் உள்ள சிக்கிம், இந்தியாவின் சிவப்பு மாநிலம் என்ற சிறப்பு பெயரை பெற்றுள்ளது. சிக்கிம் மாநிலத்தின் காடுகள், தோட்டங்கள், வீடுகள் எங்கும் ரோடோ டென்ட்ரான் என்ற சிவப்பு நிற வண்ணப்பூக்கள், வசந்த காலத்தில் பூத்துக் குலுங்கும். காடுகளில் இவை தீப்பந்தம் போல காணப்படும். இந்த தாவரம் சிக்கிம் மாநில தாவரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பூவின் 36 வகைகள் சிக்கிம் மாநிலத்தில் மட்டும் தான் காணப்படுகிறது. இதுதவிர திபெத்திய புத்த மடாலயங்கள் சிவப்பு நிறத்தில் உள்ளன. புத்த துறவிகளும், கருஞ்சிவப்பு நிற ஆடைகளை அணிந்துள்ளனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement