Advertisement

இயற்கை உலகம்: தேனீக்களை கொல்லும் நச்சு!

உலகெங்கும், தேனீக்கள் கூட்டம் கூட்டமாக செத்து மடிவது அதிகரித்துள்ளது. இது, ஏன் என்று ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள் தெரிவிக்கும் முக்கிய காரணம், பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தான். பூச்சி மருந்துகளின் பாதிப்பு, எந்த அளவுக்கு இருக்கிறது? மொத்தம், ஆறு கண்டங்களில், 198 இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தேனை ஆராய்ந்த போது, அவற்றில், 75 சதவீத தேனில், 'நிகோடினாய்ட்' எனப்படும், பூச்சி மருந்து நச்சு கலந்திருந்தது. தேனீக்களுக்கு தேன் தான் உணவு என்பதால், அவற்றிலேயே நச்சு கலந்திருப்பது, தேனீக்களுக்கு சாவு மணி அடிப்பதில் ஆச்சரியமில்லை. இதில் கவலை தரும் விஷயம், ஆள் நடமாட்டம் குறைவான தீவுகளில் சேகரிக்கப்பட்ட தேனிலும், பூச்சி மருந்து நச்சு கலந்திருப்பது தான் என்கிறது, 'நேச்சர்' இதழில் வெளியாகி உள்ள ஆய்வு.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement