Advertisement

ஆராய்ச்சி மலர்

பள்ளி வயதில், முரட்டு மாணவர்களால் மிரட்டப்படுவதால், மனச் சோர்வு, பதற்றம் போன்றவை ஏற்படுவதுண்டு. ஆனால், இந்த பாதிப்புகளில் இருந்து, சில ஆண்டுகளில், அந்த மாணவர்கள், தங்கள் மன உறுதியால், மீள முடியும் என, லண்டன் பல்கலைக் கழக ஆய்வு தெரிவித்துள்ளது.
லண்டனில், 11 ஆயிரம் மாணவர்கள் மத்தியில், இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இருப்பினும், முரட்டு மாணவர்களால் மிரட்டப்படும் சம்பவங்கள், பள்ளிகளில் நடக்காதபடிக்கு ஏற்பாடுகளைச் செய்வது அவசியம் என, ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

########


புற்றுநோயாளிகளுக்கு, மிகவும் விலையுள்ள மருந்துகள் பல தரப்படுவது வழக்கம். அவை உண்மையிலேயே, நோயாளிக்கு பலன் தருகின்றனவா? இதை அறியும் நோக்கத்தோடு, பரவலாக வழங்கப்படும், 48 மருந்துகளை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தனர்.
அந்த ஆய்வின் முடிவில், இந்த மருந்துகளில், 57 சதவீத மருந்துகளால், நோயாளிகளுக்கு குறிப்பிடத்தக்க பலன் ஏதும் கிடைப்பதில்லை என, தெரியவந்தது. இது குறித்த ஆய்வுக் கட்டுரை, 'பிரிட்டிஷ் மெடிகல் ஜர்ன'லில் வெளியாகி உள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement