Advertisement

வேகமாக காயத்தை ஆற்றும் களிம்பு!

அடிபடுவதாலோ, அறுவை சிகிச்சை செய்ததாலோ ஏற்படும் புண்களை, உடனடியாக, ஆறச் செய்யும் களிம்பு ஒன்றை, ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க மருத்துவர்கள் உருவாக்கி உள்ளனர்.

'மீட்ரோ' (MeTro) என்ற அந்த களிம்பை, புண்கள் மீது தடவிய, 60 வினாடிகளுக்குள், சற்று திடமாக ஆகி மூடிக் கொள்கிறது. இதனால், தொற்றுக்கள் ஏற்படுவதை தடுப்பதோடு, காயத்தை வேகமாக ஆற்றவும் முடியும் என்கின்றனர், இதை உருவாக்கிய விஞ்ஞானிகள்.
விபத்து நடந்த இடங்களிலும், போர்க்களங்களிலும், 'மீட்ரோ' களிம்பு உதவிகரமாக இருக்கும்.
இந்த களிம்பு, சற்றே இறுகினாலும், வளைந்து கொடுக்கும் தன்மை உள்ளது என்பதால், இதை சுருங்கி விரியும் இதயம், நுரையீரல் போன்ற பாகங்களில் ஏற்படும் காயங்கள் மீதும், நேரடியாக, மருத்துவரால் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பன்றிகளின் மீது, விரிவான ஆராய்ச்சிகள் செய்ததில், 'மீட்ரோ' களிம்பு, நல்ல பலன்களை தந்துள்ளது. விரைவில், மனிதர்கள் மீதும், இதை பரிசோதிக்க உள்ளதாக, விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement