Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

நோபல் தெரியும்...ஏபெல் தெரியுமா


நோபல் பரிசு, கணிதத் துறைக்கு வழங்கப்படுவது இல்லை.இக்குறையைப் போக்க, கணிதத் துறைக்கு ஏபெல் பரிசு வழங்கப்படுகிறது. இது கணித துறையின் உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது. நீல்ஸ் ஹென்ரிக் ஏபெல் என்பவர் நார்வே நாட்டு கணித மேதை. 19ம் நூற்றாண்டை சேர்ந்தவர். 26 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த இவரது பெயரால், 24க்கும் மேற்பட்ட கணித தேற்றங்கள் இன்றும் கணிதத் துறையில் பயன்படுகின்றன. இவரது நுாற்றாண்டு விழா 1902ல் கொண்டாடப்பட்ட போது ஏபெல் பரிசு ஏற்படுத்தப்பட்டது. பரிசுத் தொகையின் மதிப்பு 2 கோடியே 30 லட்சம் டாலர்.

தகவல் சுரங்கம்

பெயர் மாற்றம்


தற்போது குஜராத்தில் உள்ள கண்ட்லா துறைமுகம் தீன் தயாள் உபாத்யாய் துறைமுகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.,வின் முன்னோடித் தலைவர்களில் முக்கிய மானவரான தீன்தயாள் 1942ல் இருந்து ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். 1951ல் சியாமா பிரசாத் முகர்ஜி பாரதிய ஜனசங்க கட்சியை தொடங்கிய போது, தீன் தயாள் உபாத்யாய் கட்சியின் பொதுச் செயலர் ஆனார். ரயிலில் பயணம் செய்யும் போது, உ.பி., முகல்சராயில் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement