Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியலால் பரவும் 'டெங்கு'


தவளைகளின் எண்ணிக்கை குறைவு காரணமாக, கொசுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றன. நீர் நிலைகள் மறைவதால் தவளைகள் குறைகின்றன.
அறிவியல் ஆய்வகங்களும் தவளைகளின் எண்ணிக்கை குறைய காரணம். ஆய்வுக்கூடங்களில் செய்முறை செய்ய, கல்லுாரி, பல்கலைக்கழகங்களுக்கு லட்சக்கணக்கான தவளைகள் தேவைப்படுகின்றன. இந்தக் குறையைப் போக்க பல்கலைக்கழக நிதி நல்கை குழு, விலங்கினங்களை அறுக்காமல் தொழில்நுட்பம் மூலமாகத் தான் பயிற்றுவிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. ஆயினும் இது ஏட்டளவில் உள்ளது. இது அமலாக்கப்பட்டால் டெங்கு குறையும்.

தகவல் சுரங்கம்



வட மாநிலப் பலகாரங்கள்



தமிழகத்தில் தீபாவளிக்கென செய்யப்படும் பெரும்பாலான பலகாரங்கள், வட மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவை. அவற்றின் பெயர்களும் சமஸ்கிருதம், இந்தியை சார்ந்தே உள்ளன. 'பூந்த்' என்ற இந்திச் சொல் சிறுதுளியைக் குறிக்கிறது. கடலை மாவு சிறுசிறு துளிகளாக விழும் வகையில் செய்யப்படுவதால் தான் 'பூந்தி' என்ற பெயர்
வந்தது. 'லட்டூகம்' என்றால் சிறுபந்து என அர்த்தம்.இது தான் லட்டு என சுருங்கியது. காசியில்
அன்னபூரணிக்கு தீபாவளியன்று லட்டுத்தேர் விசேஷம். வட மாநில பலகாரங்களில் கோதுமை, மைதா, ரவை, நெய் கட்டாயம் இருக்கும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement