Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

கிடைமாட்டு நெய்


கொட்டத்தில் வளரக்கூடிய பக்குவமும், பொறுமையும் இல்லாத மாடுகள் தான் கிடை மாடுகள். இந்த மாடுகளை ஊர், ஊராக மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று, தண்ணீர் கிடைக்கும் இடங்களில் கிடை போட்டு வளர்ப்பர். கிடை மாடுகள் செடி, கொடிகளோடு பல வகை மூலிகைகளையும் உண்பதால், இது கொடுக்கும் பாலில் மருத்துவ குணம் நிறைந்துள்ளது. விளைநிலங்களின் பரப்பளவு காணாமல் போக போக கிடைமாட்டு நெய்யும் காணாமல் போய் விட்டது. இன்று மிகப்பெரிய உயரிய ஹோமங்களில், பூஜையில் மட்டும் கிடைமாட்டு நெய் பயன்படுத்தப்படுகிறது,

தகவல் சுரங்கம்

நோபலுக்கு பெருமை


இந்திய கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், 104 ஆண்டுகளுக்கு முன்னர் நோபல் பரிசு பெறக்
காரணமாக இருந்த படைப்பு 'கீதாஞ்சலி'. அந்த கவிதைத் தொகுப்புக்குப் பெருமை சேர்க்கும்
வகையில், இந்திய ரயில்வே 'கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ்' என ஒரு ரயிலுக்குப் பெயர்
சூட்டியுள்ளது. இந்த ரயில் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷனையும், ஹவுராவை யும் இணைக்கிறது. தாகூரின் சிறப்பு பெயர் குருதேவ் என்பதை சிறப்பிக்கும் வகையில்,
'குருதேவ் எக்ஸ்பிரஸ்' நாகர்கோவிலுக்கும் கோல்கட்டாவின் ஒரு பகுதியான ஷாலிமாருக்கும் இடையே இயங்குகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement