Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

உணவு நாகரிகம் தரும் பிரச்னை


நவீன உணவு கலாசாரத்தில் 'கார்ன் பிளவர்' (சோள மாவு) முக்கிய இடம் பெற்றுவிட்டது.
சூப் போன்றவற்றுக்கு நெகிழ்வுதன்மையை தருவதற்கும், வறுவல் போன்றவற்றுக்கு மொறு
மொறுப்பு தருவதற்கும் 'கார்ன் பிளவர்' கட்டாயமாகி விட்டது. முன்பு கார்ன் பிளவருக்கு
பதிலாக கடலைமாவு தான் பயன்படுத்தப்பட்டது. கார்ன் பிளவர், அதிகமாக பயன்படுத்தும் போது தோலில் வெள்ளை நிறப் புள்ளிகள் ஏற்படுகின்றன. ஐரோப்பியர்கள் சிவப்பு நிறமாக இருப்பதால் அவர்கள் தோலில் வெள்ளை புள்ளிகள் வெளியே தெரிவதில்லை.

தகவல் சுரங்கம்

வாடகை அதிகமான இடம்


மும்பையில் 'நாரிமன் பாயின்ட்' உலகிலேயே வாடகை அதிகமுள்ள இடங்களில் ஒன்று. விடுதலை இயக்க வீரரான குர்ஷித் பிரேம்ஜி நாரிமன் பெயரால், இது நாரிமன் பாயின்ட் என அழைக்கப்படுகிறது. அரபிக்கடல் பகுதியின் உள்கட்டமைப்பை மாற்றி, நிலம் சார்ந்த பகுதியாக உருவாக்க நாரிமன் தான் பாடுபட்டார். மும்பை முன்பு கோட்டைகளால் சூழப்பட்டு இருந்தது. நகருக்குள் உள்ளே வர மூன்று நுழைவாயில்கள் மட்டுமே இருந்தன. 'செயின்ட் தாமஸ் கதீட்ரலின்' அருகே இருந்த கதவு 'சர்ச்கேட்' என அழைக்கப்பட்டது. தற்போது நாரிமனின் பெயரால் 'வீர் நாரிமன் சாலை' என அழைக்கப்படுகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement