Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

பழுபாகற்காய் சீசன்


அக்டோபர் முதல் ஜனவரி வரை, தமிழகத்தில் பழுபாகற்காய் சீசன் நடைபெறுகிறது. சர்க்கரை நோய் மற்றும் பனிக்காலத்தில் தீவிரமாகும் மூட்டு வலி போன்றவற்றுக்கு, பழுபாகற்காய் சிறந்தது. பழுபாகற்காய் ஒரு கிழங்கில் இருந்து உருவாகிறது. பனை மரத்தைப் போன்று இதிலும் ஆண், பெண் என இரு வகைகள் உள்ளன. ஆண் பழுபாகற்காய் தாவரம் பூக்க மட்டுமே செய்யும். காய்ப்பதில்லை. பெண் பழுபாகற்காய் பூத்து காய்த்துக்குலுங்கும். பழுபாகற்காய் கிழங்கு விதைத்துள்ள இடத்தில், மனிதர்களின் காலடி பட்டால் விளைவது இல்லை. குழந்தை பெற்ற தாய்மார்கள் சாப்பிட்டால் பால்சுரக்கும்.

தகவல் சுரங்கம்

சேலைகளின் நகரம்


தீபாவளிக்கு மொத்த வியாபாரிகள், மொத்தமாகப் படை எடுக்கும் நகரமாக குஜராத்தின் சூரத் உள்ளது. இது 'சேலைகளின் நகரம்' என அழைக்கப்படுகிறது. சூரத் என்ற சொல்லுக்கு நன்றாக வடிவமைக்கப்பட்டது என்பது பொருள். குஜராத்தின் வணிகத் தலைநகராக சூரத் விளங்குகிறது. இதன் பழைய பெயர் சூர்யாபூர். உலகின் முக்கியமான வைர மற்றும் ஜவுளி விற்பனை மையமாக சூரத் உள்ளது. ஆமதாபாத் செல்லும் ரயில், சூரத்தைக் கடந்து தான் செல்லும். சுத்தமான நகரங்களின் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் 'சுத்தமான ரயில் நிலையம்' என்ற பெயரை 'சூரத் ரயில் நிலையம்' பெற்றுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement