Advertisement

சென்னை கேமிரா பேரில் புகைப்பட கண்காட்சி.

சென்னை கேமிரா பேரில் புகைப்பட கண்காட்சி.


சென்னையில் மூன்று நாட்கள் நடைபெறும் கேமிரா பேர் என்ற புகைப்பட கண்காட்சிக்குள் ஒரு கண்காட்சியாக போட்டோகிராபி சொசைட்டி ஆப் மெட்ராஸ் அமைப்பினர் ஒரு புகைப்பட கண்காட்சியினை நடத்திவருகின்றனர்.

பிஎஸ்எம் என்று அழைக்கப்படும் இந்த போட்டோகிராபி சொசைட்டி புகைப்பட ஆர்வலர்களை போட்டோ வாக்,கருத்தரங்கு மற்றும் பல போட்டிகள் நடத்தி ஊக்கப்படுத்தி வருகிறது.

சொசைட்டியின் உறுப்பினர்கள் எடுத்த படங்கள் இங்கு கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.பறவை,விலங்கு,ஆதிவாசி இனத்தவர்,கடற்கரை என்று பல்வேறுவிதமான படங்களை வைக்கப்பட்டுள்ளன.
படங்களை பார்த்து உள்ளே வந்தவர்கள் தாங்களும் இது போல படம் எடுக்க விரும்பும் பட்சத்தில் சொசைட்டியின் உறுப்பினர்களிடம் கேள்வி கேட்டு பதில் பெறுகின்றனர்.

வருகின்ற 8ந்தேதி வரை இந்த புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது.ஒரே கல்லில் இரு மாங்காய் போல கேமிரா பேர் என்ற புகைப்பட தொழில் நுட்ட கண்காட்சியையும் இந்த புகைப்பட கண்காட்சியையும் ஒரு சேர பார்த்து மகிழலாம்.
-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement