Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

மறைந்து விட்ட எண்ணெய்


ஒரு காலத்தில் தமிழகத்தில் தீபாவளியின் போது கடலை எண்ணெய் விற்பனை தான் அதிகமாக இருக்கும். பர்மாவில் கடலை எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிந்து கடலுாரைச் சேர்ந்த 'கோவிந்த அய்யர்' தான் முதன்முதலில் சமையலில் கடலை எண்ணெய் பயன்படுத்தும் வழக்கத்தை ஏற்படுத்தினார். அதனால் தான் இன்று வரை நிலக்கடலை உற்பத்தியில் கடலுார் மாவட்டம் முன்னணியில் உள்ளது. கடலை எண்ணெய்யின் கொதிநிலை அதிகம் என்பதால் இது ஏற்படுத்தும் பாதிப்புகள் குறைவு. 'ஒமேகா-6' கடலை எண்ணெய்யில் உள்ளது.

தகவல் சுரங்கம்

போர்பந்தர் சிறப்புகள்


தேசத்தந்தை பிறந்த ஊர் என்பதால் போர்பந்தர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அக்டோபர் முழுவதும் காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. 'பந்தர்' என்ற சொல்லுக்கு துறைமுகம் என்று பெயர். துறைமுக நகரான இது உள்ளூர் காவல் தெய்வத்தின் பெயரோடு இணைந்து போர்பந்தர் எனப்பட்டது. இங்கு சமண சமயத்தினரின் வெண்மை நிறக் கோயில்கள் அதிகம் இருப்பதால் 'வெள்ளை நகரம்' என சிறப்பிக்கப்படுகிறது. காந்தியடிகள் பிறந்த வீடு 'கீர்த்தி மந்திர்' என அழைக்கப்படுகிறது. கஸ்துாரிபா பிறந்த வீடும் போர்பந்தரில் தான் உள்ளது. கிருஷ்ணரின் நண்பர் குசேலருக்கு ஒரு கோயில் போர்பந்தரில் உள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement