Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

நோய் எதிர்ப்பாற்றல் தரும் சூப்


நோய் எதிர்ப்பாற்றல் உள்ளவர்களுக்கு டெங்கு, 'மர்மக்காய்ச்சல்' போன்றவை வரும் சாத்தியக் கூறுகள் குறைகின்றன. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக மேகாலயாவில் 'பட்டுப்புழு சூப்' அருந்துகின்றனர். நான்கு வகையான பட்டுப்புழுக்கள் பட்டு தயாரிக்கப் பயன்படுகின்றன. இவற்றில் எரி என்ற பட்டுப்புழு அதிக சதைப்பற்றுடன் இருக்கும் புரதச்சத்தும் மிகுந்தது. இதிலிருந்து சூப் தயாரித்து, 'ஷில்லாங் சூப்' என்ற பெயரில்
விற்கின்றனர். சீசன் மாறிய காலங்களில், தொற்றுநோய் பரவும் காலங்களில் பட்டுப்புழு சூப்பின் விற்பனையும் அதிகமாக உள்ளது.

தகவல் சுரங்கம்

அக்டோபரில் 'கிராம சபைகள்'


கிராம சபைகள் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, ஜனவரி 26 குடியரசு தினம், மே 1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் ஆகிய நாட்களில் கட்டாயம் கூடுகின்றன. இவை தவிர பிற நாட்களிலும் கிராம சபையைக் கூட்டலாம். ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட 18 வயதிற்கு மேல் உள்ள அனைவரும், இதன் உறுப்பினர்கள். வளர்ச்சிக்குரிய திட்டங்கள், ஆண்டு வரவு செலவு திட்டங்கள் போன்றவை கிராம சபைக் கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பின் தான் நடைமுறைப் படுத்தப்படும். வழிகாட்டும் நெறிகளில் வெறும் வார்த்தைகளாக இருந்த கிராம சபைகளுக்கு 1993ல் நரசிம்மராவ் ஆட்சியில் சட்ட அங்கீகாரம் தரப்பட்டது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement