Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அதலைக்காய் சீசன்


'மொமார்டிகா டியுபரோசா' என்பது அதலைக்காயின் தாவரவியல் பெயர். அதலைக்காய், பாகற்காயுடன் நெருங்கிய மரபுவழித் தொடர்பு கொண்ட ஒரு தாவரம். அதலைக்காயில் கசப்பான கிளைக்கோசைடுகள், மொமார்டிக்கோசைடுகள், இன்சுலினுக்கு இணையான பண்புரதங்கள் பெருமளவு காணப்படுகின்றன. அதலைக்காய், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. குடற்புழு போன்றவற்றுக்கான நாட்டுமருந்தாகவும், சில வேளைகளில் கருக்கலைப்புக்கும் அதலைக்காய்களைப் பயன் படுத்தி வந்துள்ளனர். கரிசல் மண்ணில் அதலைச்செடி நன்கு விளையும் தன்மை பெற்றது.

தகவல் சுரங்கம்

அக்டோபர் திருவிழா


ஆந்திராவைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர், பத்மபூஷன் விருது பெற்ற 'ராமோஜிராவ்'. இவர் ஐதராபாத்தில் 'ராமோஜிராவ் பிலிம் சிட்டி' என்ற பெரிய சினிமா நகரத்தை நிறுவியுள்ளார். ஆசியாவின் பெரிய திரைப்பட நகரமாக இது உள்ளது. 1996ல் இந்த 'சினிமா நகரம்' தொடங்கப்பட்டது. மாதந்தோறும் சுமார் 50 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த திரைப்பட நகருக்குள்ளேயே டில்லியில் உள்ள 'முஹல் கார்டன்', மைசூருவின் பிருந்தாவனம் ஆகியவற்றின் மாதிரிகள் உள்ளன. தசரா முதல் தீபாவளி வரை இந்த திரைப்பட நகரில் பெரிய அளவில் திரைப்பட திருவிழா நடைபெறுகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement