Advertisement

விரைவில் டுவிட்டரின் எழுத்துரு அளவு 280 ஆகும்!

உலகெங்கும் அரசியல்வாதிகள், இணைய செயல்பாட்டாளர்களின் ஆயுதமாக, பிரசார பீரங்கியாக மாறியிருக்கிறது டுவிட்டர்.
இதை புரிந்து கொண்டிருக்கும் டுவிட்டர் நிறுவனம், தன் 140 எழுத்துருக்கள் அளவை அதிகரிக்கலாம் என முடிவு செய்திருக்கிறது. மொபைலில் குறுஞ்செய்திகளை முன்மாதிரியாக வைத்துத்தான், டுவிட்டரின் நிறுவனர்கள், தங்கள், 'டுவிட்'டுகளுக்கு, 140 எழுத்துருக்கள் என்ற வரையறையை முடிவு செய்தனர்.
ஜப்பானிய, கொரிய மொழிகள் ஏற்கனவே உருவ வடிவிலானவை என்பதால், குறைந்த எழுத்துருக்கள் மூலம் அவர்களால் விளக்கமாக, 'டுவிட்' செய்ய முடிகிறது.
ஆனால், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் குறைவான எழுத்துருக்கள் மூலம் அதிக அளவில் கருத்துக்களை பகிர முடிவதில்லை என்கிறார், டுவிட்டரின் உயர் அதிகாரியான அலிசா ரோசென்.
இதனால், தற்போது அமெரிக்காவில் மட்டும் 280 எழுத்துருக்கள் என்ற வரையறையை இருமடங்காக ஆக்கி சோதித்து வருகிறது. இதையடுத்து, 'டுவிட்' செய்வோர் அதிக கருத்துக்களை பதிவு செய்வதும் தெரியவந்துள்ளது.
இதற்கு வரவேற்பு அதிகரித்தால், உலகெங்கும் இனி, 280 எழுத்துரு அளவை, 'டுவிட்டர்' கொண்டு வரும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement