Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

மார்பகப் புற்றுநோய்
உலகில் அக்டோபரில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகக் கொண்டாடப்படுகிறது. வால்நட்ஸ் பருப்பை அளவுடன் சாப்பிட்டால், மார்பகப் புற்றுநோயின் தாக்கம் குறையும் என, பிரிட்டனில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. பொதுவாக 'கொட்டை உணவுகள்' முழுமையான ஆரோக்கியத்தை தருகின்றன. வால்நட்ஸ் சேர்க்கப்பட்ட உணவு வகைகளைச் சாப்பிட்ட எலிகளுக்கு, மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாக இருப்பது தெரிய வந்தது. அதைப்போல வால்நட்சிற்கு, மூளையில் ஏற்படும் கட்டிகளையும்
கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது.
தகவல் சுரங்கம்
அக்டோபர் பிரிவினை
கர்சன் பிரபு வங்காளத்தை மேற்கு வங்காளம், கிழக்கு வங்காளம் என 1905ல் அக்., 16ல் இரண்டாகப் பிரித்தார். அக்டோபரில் நடைபெற்ற பிரிவினை என்பதால் வரலாற்றில் 'அக்டோபர் பிரிவினை' என்கின்றனர். இந்துக்கள் அதிகமுள்ள பகுதி கிழக்கு வங்காளம் என்றும்,
முஸ்லிம்கள் அதிகமுள்ள பகுதி மே.வங்காளம் எனவும் கர்சன் அறிவித்தார். இப்பிரிவினை நிர்வாக வசதிக்காக என கர்சன் கூறினாலும் இந்துக்களையும் - முஸ்லிம்களையும் பிரிக்க வேண்டும் என்பதே இவரது உள்நோக்கமாக இருந்தது. வங்கப் பிரிவினையை எதிர்த்து தான் சுதேசி இயக்கம் தோன்றியது. பிரிந்த வங்காளம் மீண்டும் 1911ல் ஒன்றாக இணைக்கப்பட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement