Advertisement

அக்கம் பக்கம்

'பிக் பாஸ்' ஏற்படுத்தும் பீதி

ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் தலைவருமான, சந்திரபாபு நாயுடு, கடும் பீதியில் உறைந்து போயுள்ளார். அவர், சற்றும் எதிர்பார்க்காத திசையில் இருந்து, எதிர்ப்பு வந்துள்ளதே, பீதிக்கு காரணம்.
சந்திரபாபு நாயுடு, ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு நடிகருமான, மறைந்த, என்.டி.ராமாராவின் மருமகன் என்பது, அனைவருக்கும் தெரிந்த விஷயமே.
என்.டி.ராமா ராவ், உயிருடன் இருந்த போதே, கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றி, அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தவர் இவர்.
இதனால், என்.டி.ராமாராவின் மகன்கள், அப்போது, சந்திரபாபு நாயுடு மீது, கடும் ஆத்திரம் அடைந்தனர். இவர்களில், பிரபல நடிகர், ஹரிகிருஷ்ணாவும் ஒருவர்; பின், அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டது.
ஆனாலும், அந்த பகை, அவர்களிடம், உள்ளுக்குள்ளேயே மறைந்திருந்தது, இப்போது தான் தெரிய வந்துள்ளது. ஹரிகிருஷ்ணாவின் மகன், ஜூனியர், என்.டி.ஆர்., தெலுங்கு திரையுலகில், இப்போது முன்னணி நடிகர்.
தெலுங்கு, 'டிவி' சேனலில், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியையும் நடத்தி, ஆந்திராவில், பட்டி தொட்டியெல்லாம் பிரபலமாகி உள்ளார்.
சந்திரபாபுவை பழி தீர்ப்பதற்கு, இப்போது, ஜூனியர் என்.டி.ஆரை தயார் செய்து வருகிறார், ஹரிகிருஷ்ணா. ஜூனியர் என்.டி.ஆருக்கு, ஆந்திர மக்களிடையே செல்வாக்கு அதிகம் இருப்பதால், என்ன செய்வது என தெரியாமல், கவலையில் ஆழ்ந்துள்ளார், சந்திரபாபு நாயுடு.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement