Advertisement

பக்க வாத்தியம்

பிரச்னையை கேட்க நேரமில்லையா?

பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணையிலிருந்து, விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதற்காக, கோவை கலெக்டர், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், ஆழியாறு அணைக்கு சென்றனர்.
எம்.எல்.ஏ., கஸ்துாரி, கார் அருகே நின்று கொண்டிருந்தார். அவ்வழியே சென்ற ஒருவர், 'எங்க ஏரியாவில், தண்ணீர் வர்றதில்லே... குப்பையும் அதிகமா இருக்கு... எங்க பகுதி பிரச்னையெல்லாம் உங்களுக்குத் தெரியாதா... பார்க்க மாட்டீங்களா...' என, சரமாரியாகக் கேள்வி கேட்டார்.
பயந்த, எம்.எல்.ஏ., உடனே போலீசை அழைத்து, தன் பாதுகாப்புக்காக நிற்கச் சொன்னார். இதைப் பார்த்த மற்றொரு பொதுஜனம், 'ஓட்டு கேட்க மட்டும், வணக்கமும், கையுமா வீட்டுக்கு வந்து நின்னுடுறீங்க... ஏரியா பிரச்னையைச் சொன்னா, கேட்க நேரமில்லையோ...' எனக் கேட்டபடியே, அங்கிருந்து சென்றார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement