Advertisement

'டவுட்' தனபாலு

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்: தமிழகம் நன்றாக இருக்க வேண்டுமெனில், தி.மு.க., - - அ.தி.மு.க.,விற்கு ஓட்டளிக்க கூடாது. நாடு நன்றாக இருக்க வேண்டுமெனில், பா.ஜ., -- காங்., கட்சிகளுக்கு ஓட்டளிக்க கூடாது.

டவுட் தனபாலு: நீங்க குறிப்பிடும் கட்சிகளுடன், கூட்டணி வைக்காமல் இருப்பீங்க என்பதற்கு என்ன உத்தரவாதம்... உங்களின் கடந்த கால செயல்பாடுகள், இந்த விஷயத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தலையே... தே.மு.தி.க.,வுக்கு ஓட்டுப் போடுங்கள்னு, தைரியமாய் கேட்க முடியாத அளவுக்கு ஆகிட்டீங்களா... அதனால தான், இப்படி சுத்திவளைத்து கோரிக்கை வைக்குறீங்களோ என்ற, 'டவுட்' எழுதே...!

சசிகலா அக்கா மகன் தினகரன்: அரசியல் காழ்ப்புணர்ச்சி இருந்தாலும், பொதுமக்களை பாதிக்
கக்கூடிய விஷயங்களில், அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.

டவுட் தனபாலு: 'சொந்தக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து செயல்படாத நீங்க, அரசியல் காழ்ப்புணர்ச்சி குறித்தும், அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து போராடுவது குறித்தும் பேசுறீங்களே... இது, ஓவராத் தெரியலையா... ஊருக்குத்தான் உபதேசம்; எனக்கில்லை என்பது இதுதானா'ன்னு, யாரும், 'டவுட்' எழுப்பிடப் போறாங்க...!

தமிழக, பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: தமிழக அரசியல் சூழ்நிலையையும், புதிய கவர்னர் நியமனத்தையும் இணைத்து பார்க்கக் கூடாது. புதிய கவர்னர் நியமனம், தமிழக அரசியல் சூழ்நிலையில், எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

டவுட் தனபாலு: தமிழக முதல்வருக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் பெறப்பட்ட மனுக்கள் மீது, பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் என்ன நடவடிக்கை எடுத்தாரோ, அதையே தான், புதிய கவர்னர் பன்சாரிலால் புரோஹித், கடைபிடிப்பார்... அதனால, அதிருப்தி அணியினரும், எதிர்க்கட்சியினரும், எக்குத்தப்பான ஆசைகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம் என்பதைத்தான், இவ்வளவு நாசுக்கா சொல்றீங்கன்னு, 'டவுட்' இல்லாமப் புரியுது...!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement