Advertisement

அக்கம் பக்கம்

குழந்தையை பறிச்சுட்டாங்க!


மத்திய அமைச்சரவை மாற்றத்தில், பதவியை இழந்த ராஜிவ் பிரதாப் ரூடியை விட, உமா பாரதி தான், கடுமையான சோகத்தில் மூழ்கியுள்ளார். பா.ஜ.,வின் மூத்த தலைவர்களில் ஒருவர், உமா.மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற போது, கங்கையை துாய்மை படுத்தும் துறை என்ற புதிய அமைச்சகத்தை உருவாக்கி, அதன் அமைச்சராக, உமா பாரதியை நியமித்தனர்.இந்த அமைச்சகத்தில், உமா பாரதி, சுறுசுறுப்பாக செயல்படவில்லை. 'கங்கையை துாய்மைப் படுத்தப் போவதாக, இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தான், சொல்லப் போகிறீர்கள்?' என, சுப்ரீம் கோர்ட், கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு, ஆமை வேகத்தில் பணிகள் நடந்தன.மத்திய நீர்வழி போக்குவரத்துத் துறை அமைச்சரான, நிதின் கட்கரியும், தன் திட்டங்களுக்கு, உமா பாரதி, போதிய ஒத்துழைப்பு தர மறுப்பதாக, பிரதமர் மோடியிடம், 'போட்டு' கொடுத்தார்.டென்ஷனான மோடி, கங்கை துாய்மைப் படுத்துதல் துறையை, உமா பாரதியிடமிருந்து பறித்து, நிதின் கட்கரியிடம் கொடுத்து விட்டார். இப்போது, குடிநீர் துறை மட்டுமே, உமாவிடம் உள்ளது.இதில் ரொம்பவே, 'அப்செட்'டான உமா, 'கங்கை நதி, என் குழந்தை போன்றது; அந்த துறையை பறித்ததை, என் குழந்தையை என்னிடமிருந்து பறித்தது போல் உணர்கிறேன்' என, கண்ணீர் வடிக்கிறார்.நிதின் கட்கரியோ, 'குழந்தை என்று கூறினால் மட்டும் போதுமா; அதை, பராமரித்து வளர்க்க வேண்டாமா...' என, தனக்கு நெருக்கமானவர்களிடம், உமாவை பற்றி, 'கமென்ட்' அடித்து வருகிறார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement