Advertisement

பக்க வாத்தியம்

உளறிக் கொட்டிய அமைச்சர்கள்!


ஈஷா அறக்கட்டளை நிறுவனத்தின், 'நதிகள் மீட்பு' தொடர்பான விழிப்புணர்வு கூட்டம், நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடந்தது.முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர், ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், செங்கோட்டையன், சீனிவாசன், நடிகை சுஹாசினி, பாடகி சுதா ரகுநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அமைச்சர் சீனிவாசன் பேசும் போது, 'மறைந்த முதல்வர் ஜெயலலிதா...' என, பெயரை குறிப்பிட்டதும், அரங்கு திடுக்கிட்டது. அடுத்தாற்போல், 'நம் பரதநாட்டிய கலைஞர், சுதா ரகுநாதன் அவர்களே...' என அவர் இழுத்ததும், அரங்கில் சிரிப்பலை தொற்றியது. செங்கோட்டையனோ, 'சுஹாசினி மணிவாசகம் அவர்களே...' என்றார்.
துணை முதல்வர், ஓ.பன்னீர்செல்வம், தன் முறை வந்த போது, 'சுதா ரங்கநாதன் அவர்களே...' என்றாரே பார்க்கலாம்! அரங்கில் எழுந்த சிரிப்பொலியும், கிண்டலான கைதட்டலும் அடங்க, வெகு நேரமாயிற்று!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement