Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை


வி.சி., தலைவர் திருமாவளவன் பேட்டி:
தமிழக சாரணர் இயக்கத் தலைவராக, பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா நியமிக்கப்பட உள்ளார். இதன் மூலம், தமிழக அரசுக்கும், பா.ஜ.,வுக்கும் உள்ள உறவு தெரிந்து விட்டது.


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
அரசு ஊழியர் கூட்டமைப்பை உடைத்து, வேலைநிறுத்தப் போராட்டத்தை முறியடிப்பதற்கான முயற்சிகளில், பினாமி முதல்வர் ஈடுபட்டார். 'போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும்' என்றும், அரசு அச்சுறுத்தியுள்ளது. இத்தகைய அடக்குமுறைகள் மூலம், அரசு ஊழியர்களை பணிய வைத்து விடலாம் என, அரசு நினைத்தால், தோல்வியையே எதிர்கொள்ள நேரிடும்.



சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி ராம்தாஸ் பாஜி பக்கரே பேட்டி: அரசு பள்ளிக் குழந்தைகள், தெளிவான மனநிலையில் இருப்பர். அரசு பள்ளி ஆசிரியர்கள், தகுதி வாய்ந்தவர்கள். ஆனால், தனியார் பள்ளி ஆசிரியர்கள், தகுதி வாய்ந்தவர்கள் என, சொல்ல முடியாது. இந்நிலை மாற வேண்டும். எந்த வேற்றுமையும் இல்லாமல், பெரிய கனவுகளோடும், நம்பிக்கையோடும், குழந்தைகள் வளர வேண்டும்.


பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி பேட்டி: தமிழகத்தில், மதுக்கடைகளுக்கு எதிராக, பா.ம.க., நடத்திய தொடர் போராட்டம், வழக்குகள் மூலம், மதுக்கடைகளை மூட, நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல், '108' ஆம்புலன்ஸ், மருத்துவமனையில் ஒவ்வொருவருக்கும் தனி ஊசி போன்ற திட்டங்கள் தமிழகத்திற்கு கிடைக்க, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி தான் காரணமாக இருந்தார். நல்ல திட்டங்கள், நல்லது செய்ய நினைப்பவர்களுக்கு மட்டுமே, மக்கள் ஓட்டளிக்க வேண்டும்.



புதுச்சேரி மாநில, பா.ஜ., தலைவர் சாமிநாதன் பேட்டி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மத்திய அரசுடனும், கவர்னருடனும், மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். இதனால், மத்திய அரசின் திட்டங்களை, இங்கு செயல்படுத்த முடியவில்லை. எங்களை, எம்.எல்.ஏ.,க்களாக ஏற்க மறுத்துவிட்டு, சபாநாயகர் வைத்திலிங்கம் சுற்றுலா சென்றுவிட்டார். மத்திய அரசின் ஆணையை மதிக்கும் கடமை, முதல்வருக்கும், சபாநாயகருக்கும் உள்ளது. இந்திய அரசியல் சாசன சட்டம், புதுச்சேரியில் மதிக்கப்படவில்லை.


தமிழக, காங்., தலைவர் திருநாவுக்கரசர் அறிக்கை:
'நீட்' தேர்வால் பாதிக்கப்பட்ட தமிழக மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளாமல், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலை, பா.ஜ.,வினர் கைவிட வேண்டும். இல்லையெனில், கொதி நிலையில் உள்ள தமிழ்ச் சமூகத்தினர் ஒன்று திரண்டு, பா.ஜ.,வை முற்றிலும் துடைத்தெறிவர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement