Advertisement

'டவுட்' தனபாலு

தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின்: பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜாவை, தமிழக சாரண - சாரணியர் இயக்க தலைவராக்க, முதல்வர் பழனிசாமி அரசு கூட்டு சதி செய்கிறது


டவுட் தனபாலு: இது என்ன நியமனப் பதவியா, உடனே அறிவிக்க... கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் ஓட்டளித்து தானே தேர்வாக முடியும்... அதில் என்ன உங்களுக்கு அதிருப்தி... ஒருவேளை, விதிகளை மீறி தேர்தலில் முறைகேடு நடந்தால், சட்டரீதியாக அதை அணுகலாமே... அப்புறம் ஏன் இவ்வளவு பதறுறீங்க என்ற, 'டவுட்' வருதே...!


சசிகலா அக்கா மகன் தினகரன்:
எங்கள் பக்கம், 90 சதவீத தொண்டர்கள் உள்ளனர். விரைவில், அ.தி.மு.க.,வை மீட்டெடுப்போம்.




டவுட் தனபாலு: நேத்து வரைக்கும், 'பெரும்பாலான நிர்வாகிகள் எங்க பக்கம் இருக்காங்க... எம்.எல்.ஏ.,க்களும், எம்.பி.,க்களும் இருக்காங்க'ன்னு சொல்லி வந்தீங்க... தினம் பார்த்துப் பழகியவர்களின் நிலைப்பாட்டையே கணிக்க முடியாத நீங்க, தொண்டர்களின் மனதை எப்போ அறிந்தீங்க என்பது தான், என்னோட, 'டவுட்!'




-மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி:
ஒவ்வொரு ஆண்டும், நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பெருமளவு உயிர் சேதமும், பொருள் சேதமும் நடப்பது கவலை அளிக்கிறது. எனவே, இவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி தீவிரமாக ஆராய வேண்டும்.




டவுட் தனபாலு: தொடர்கதை போல ஒவ்வொரு ஆண்டும் நடக்குதுன்னு சொல்றீங்க... அதைத் தடுக்க, இன்னும் ஆராயவே ஆரம்பிக்கலையா... இதுவே, எதிர்க்கட்சி வரிசையில் இருந்தால், 'டக்குடக்கு'னு யோசனை சொல்லி இருப்பீங்களே... அது மட்டும் எப்படி சாத்தியமாகுது என்பது தான், பெரும், 'டவுட்'டாகவே இருக்கு...!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement