Advertisement

அக்கம் பக்கம்

பரம ரகசியம்!


நிர்மலா சீதாராமன், ராணுவ அமைச்சராக பொறுப்பேற்றதை, மோடி அமைச்சரவையில் உள்ள, சக அமைச்சர்கள் சிலரால், இன்னும் ஜீரணிக்கவே முடியவில்லை.அமைச்சரவை மாற்றம் தொடர்பாக பேச்சு அடிபட்டதுமே, மூத்த அமைச்சர்களான, ஜெட்லி, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சுஷ்மா சுவராஜுடன், தனித்தனியாக ஆலோசனை நடத்தினார், பிரதமர் மோடி.'யாரை, ராணுவ அமைச்சராக்கலாம்' என, அவர்களின் ஆலோசனையை கேட்டார். நான்கு பேருமே, யாரையும் பரிந்துரைக்கவில்லை.இதன்பின், நான்கு பேரையும், ஒன்றாக அழைத்து, ஆலோசனை நடத்தினார்; அப்போதும் கூட, ராணுவ அமைச்சர் யார் என்பது பற்றி, மூச்சுக்கூட விடவில்லை, மோடி.இதனால் பலரும், யார் யார் பெயரையோ கூறியபடி இருந்தனர். ஆனால், பதவியேற்பு விழா நடந்த ஜனாதிபதி மாளிகையில் தான், புதிய ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன் என்பது, சக அமைச்சர்களுக்கு தெரிந்தது.நிர்மலாவுக்கு, கட்சியின் மூத்த தலைவர்களும், சக அமைச்சர்களும், புன்னகையுடன் கூடிய வாழ்த்துக்களை தெரிவித்தாலும், உள்ளுக்குள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.'நிர்மலாவுக்கு, அரசியல் அனுபவம் இல்லை; எங்களைப் போன்ற அனுபவசாலிகளை, ராணுவ அமைச்சராக்கியிருக்கலாம்; பிரதமர் எதற்கு, 'ரிஸ்க்' எடுக்கிறார்' என, வயிற்றெரிச்சலில் புலம்புகின்றனர்.நிர்மலாவோ, இவர்களைப் பற்றி கவலைப்படாமல், விறு விறுவென வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார். இதனால், வயிற்று எரிச்சல் பார்ட்டிகளின் காதுகளில் இருந்து, வண்டி வண்டியாக புகை வருகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement