Advertisement

பக்க வாத்தியம்

'சட்டம் - ஒழுங்கு சந்திக்கு வந்துடும்!'


நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர், கபில்குமார் சரத்கர், தன் அலுவலகத்தில் இணையதள வசதியை துவக்கி, செயல் விளக்கம் அளித்தார்.கமிஷனரின் பேச்சை, உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தனர். பாளை ஐகிரவுண்ட் வளாக, காவல் நிலைய மகளிர் இன்ஸ்பெக்டர் பத்மாவதி, எதையும் பொருட்படுத்தாமல், மொபைல் போனில், 'வாட்ஸ் ஆப்' தகவல்களைப் பார்த்தபடி இருந்தார்.
கிட்டத்தட்ட, ௪௦ நிமிடங்கள் நடந்த செயல் விளக்கத்தை, அவர் ஒரு நிமிடம் கூட கவனிக்கவில்லை. இதைப் பார்த்த சக போலீசார் சிலர், 'இவங்களை மாதிரியே, நம்ம டிபார்ட்மென்ட்ல எல்லாரும் இருந்துட்டா போதும். சட்டம் - ஒழுங்கு சந்திக்கு வந்துடும்' என, கமுக்கமாக, 'கமென்ட்' அடித்து சிரித்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement