Advertisement

ஏழ்மையிலும் 2 லட்சம் மரக்கன்று நட்டு சாதனை! பசுமை காவலராக திகழும் 85 வயது முதியவர்

பெரம்பலுார்: அரியலுாரைச் சேர்ந்த, 85 வயது முதியவர், 20 ஆண்டுகளாக கோவில்கள், பொது இடங்களில் மரக்கன்றுகளை நட்டு, பசுமை காப்பாளராக திகழ்ந்து வருகிறார்.

சுற்றுச் சூழலை பாதுகாக்க, மழை பொழிவை அதிகரிக்க, சில ஆண்டுகளாக மரம் வளர்ப்பில் அரசும், தனியார் தொண்டு நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன. ஆனால், எதிர்காலத்தில் மரங்களின் சேவை, நமக்கு தேவை என்பதை முன்கூட்டியே யோசித்து ஏழை முதியவர் ஒருவர், 20 ஆண்டுகளாக மரக்கன்றுகளை பல இடங்களில் நட்டு, வளர்த்து வருகிறார்.


அரியலுார் மாவட்டம், திருமானுார் அருகே கள்ளூர் என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவர், 20 ஆண்டு களாக, 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு சென்று, கலெக்டர், எஸ்.பி., உள்ளிட்ட அரசு துறை அலுவலக வளாகங்கள், பள்ளிகள், சாலையோரங்கள், கோவில் வளாகம் என, பல இடங்களில் பலவகையான மரக்கன்றுகளை நட்டு, சமூக பணியாற்றி வருகிறார்.

இப்படியாக கருப்பையா, இதுவரை, இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளார். தன் வீட்டு தோட்டத்தில் வேம்பு, புங்கன், வாகை, பூவரசு, புளியங்கன்று என, பலவகையான மரக்கன்றுகளை, 2 முதல், 3 அடி வளர்த்து பின், மேற்கண்ட இடங்களில் நட்டு, பராமரிக்கிறார்.


தினமும் அதிகாலை, 5:00 மணிக்கெல்லாம், ஒரு மஞ்சள் பையில் மரக்கன்றுகளுடன், ஏதாவது ஒரு ஊரில் நட்டு, அருகில் இருப்பவர்களிடம் தண்ணீர் ஊற்றி பராமரிக்குமாறு, சொல்லி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். எங்கு சென்றாலும் மதியம் வீட்டுக்கு வந்து, தன் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வார். இந்த பணியில், அவரது மகனும் உதவியாக இருந்து வருகிறார்.

வெளிமாவட்டங்களுக்கும் சென்று வந்த கருப்பையா, தற்போது வயது முதிர்வின் காரணமாக, அரியலுார் மாவட்டப் பகுதிகளில் மட்டும், மரக்கன்றுகளை நட்டு வருகிறார்.

கருப்பையா கூறியதாவது: மனிதன், தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என இருக்காமல், சமூகத்தின் மீது சிறிதேனும் அக்கறை கொள்ள வேண்டும்.சமுதாயத்துக்காக, ஏதாவது செய்ய வேண்டும். 20 ஆண்டு களாக, எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் நான் மரக்கன்றுகளை நட்டு பாதுகாத்து வருகிறேன். இதனால், இயற்கையை பாதுகாக்க முடியும் என நம்புகிறேன்.

இதற்காக, விதைகளை தரம் பிரித்து, உலர்த்தி, முளைக்க வைக்கிறேன். இன்று மரம் வளர்ப்பில் காட்டும் அக்கறையை, 10 ஆண்டுகளுக்கு முன்பே அரசும், மக்களும் காட்டியிருந்தால், இன்று தமிழகம் வறட்சியிலிருந்து மீண்டிருக்கும்.பெரம்பலுார் கலெக்டராக இருந்த தாரேஷ்அஹமது உட்பட பல கலெக்டர்களிடம் பாராட்டும், சான்றிதழும் பெற்றுள்ளேன்.
சாகும் வரை இந்த சமூகப் பணியை செய்வேன். இதற்காக, யாரிடமும் ஒரு பைசா வாங்க மாட்டேன். அப்படி வாங்குவது கூலிக்கு வேலை செய்வது போலாகும்; சமூக பணியாகாது. நான் கன்றுகளாக நட்டு, பெரிதாக வளர்ந்த மரங்களை மீண்டும் பார்க்கையில், எனக்குள் எல்லையில்லா மகிழ்ச்சி பிறக்கும். அதையே பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (15)

 • kuthubdeen - thiruvarur,இந்தியா

  இந்த பெரியவர் நீடூடி வாழட்டும் ....இவரல்லவா மனிதருள் மாணிக்கம் இவரை போன்றவர்களை அரசும் மக்களும் கண்டுகொள்வதே இல்லை ...செய்தி வெளியிட்ட தினமலருக்கு நன்றி .

 • Sendray - Chennai,இந்தியா

  மனிதம் தழைக்கட்டும் அய்யா..

 • நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  சொந்த வீட்டில் கூட ஒரு மரம் நட்டு வளர்க்காத சிலர் இருக்கையில் நாட்டிற்கே மரம் வளர்க்கும் நீங்கள் தான் உன்னதமானவர். வாழ்க நீ எம்மான்...

 • g.s,rajan - chennai ,இந்தியா

  நல்ல பணி,அய்யாவிற்கு வாழ்த்துக்கள் ,இக்கால இளைய சமுதாயம் களம் இறங்கவேண்டும் ஜி. எஸ் ராஜன் சென்னை

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  இவரை நரேந்திர மோதியிடம் அழைத்துச் சென்று மோதியிடம் சொல்லுங்கள் "சொல்லாதே .... செய்" என்று ......

 • சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்

  தங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் அய்யா.... உம்மை போன்ற உன்னத மனிதர்களால் தான் இந்த மண்ணில் இன்னமும் தர்மமும், நீதியும், மனிதமும் மிச்சம் இருக்கின்றன......

 • Meenu - Chennai,இந்தியா

  நமது நாட்டு தலைவர்களுக்கு இவர் எவ்வளவோ மேல். மனித குலத்துக்கு நல்லது செய்கிறார். நமது தலைவர்களால் மின்சாரத்தை நமக்கு தடையில்லாமல் கொடுக்க முடியவில்லை.

 • Chola - bangalore,இந்தியா

  வாழ்க வளமுடன் ஐயா

 • rajan. - kerala,இந்தியா

  இங்கு ஊழல் அரசியல்வாதிகள் சட்டத்துக்கு புறம்பாக ரோடோர மரங்கள் காட்டில் உள்ள மரங்கள் என காசுக்காக போட்டி போட்டு வெட்டி விட்டு மரக்கன்று நாடு விழா என போட்டோவுக்கு போஸும் கொடுப்பானுக. இந்த உயர்ந்த உள்ளம் கொண்ட மாமனிதரின் சேவை தான் சமூக சேவை என இப்பவாவது அரசு உணர்ந்து ஊக்கம் அளிக்க வேண்டும்.

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளறேல் அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை.. ஐயா, நீடூடி வாழ்க..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement