Advertisement

'டவுட்' தனபாலு

தமிழக வனத்துறை அமைச்சர் சீனிவாசன்: எம்.ஜி.ஆர்., ஆவியும், ஜெ., ஆவியும், தமிழகத்தைச் சுற்றி வருகிறது. அந்த ஆவிகள் தான், பழனிசாமி ஆட்சியை காப்பாற்றி வருகிறது; வாழ்த்தி வருகிறது.


டவுட் தனபாலு: ஏற்கனவே, 'ஜெ., ஆன்மா என்னோடு பேசியது'ன்னு பன்னீர் சொன்னதற்கு, ஆளாளுக்கு எக்குத்தப்பாய் பகடி பண்ணி வர்றாங்க... நீங்க, எம்.ஜி.ஆரையும் இதுல இழுத்து விடுறீங்களே... மொத்தத்தில், கண்ணுக்குத் தெரியாத சக்திகளால் தான் எங்க காலம் ஓடுதுன்னு, உங்களையும் அறியாமல் பேசிட்டீங்களோ என்பதில், 'டவுட்'டே இல்லை...!



த.மா.கா., தலைவர் வாசன்: பள்ளி, கல்லுாரிகள், வழிபாட்டு தலங்கள் உள்ள இடங்களில் இருக்கும் மதுக்கடைகளை தமிழக அரசு அப்புறப்படுத்தாவிட்டால், த.மா.கா., போராட்டம் நடத்தும்.



டவுட் தனபாலு: இதுக்கு எதுக்குங்க போராட்டம் எல்லாம்... 'பள்ளி, கல்லுாரி, வழிபாட்டு தலங்களுக்கு அருகில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்ற விதிகளை மீறி, தமிழக அரசு செயல்படுது... இதன் மீது நடவடிக்கை எடுக்கணும்'னு, நீதிமன்றத்தை அணுகினாலே போதுமே... அதுல அவ்வளவு பிரபலம் வராதுன்னு நினைக்குறீங்களோ என்ற, 'டவுட்' வருதே...!



தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா:
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் உள்ளது. விரைவில், விஜயகாந்த் தலைமையில், தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.




டவுட் தனபாலு: 10 சதவீதத்துக்கும் மேல் இருந்த உங்க ஓட்டு வங்கி, படிப்படியாக குறைந்து, 2.5 சதவீதத்துக்கு வந்திடுச்சு... தமிழகத்தில், ஓராண்டாக பல்வேறு பிரச்னைகள் தலையெடுத்த போதும், களத்தில் இறங்கி உங்க கட்சி தீவிரம் காட்டலை... அப்புறம் எப்படி, விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமையும்னு சொல்றீங்க... 'நான் கிங் மேக்கர் அல்ல; கிங்'னு சொல்லி, கடந்த தேர்தலில் செய்த அதே தவறை, இப்போ மீண்டும் அரங்கேற்றப் போறீங்களோ என்ற, 'டவுட்' வருதே...!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement