Advertisement

அக்கம் பக்கம்

இப்படி ஏமாற்றலாமா?


'இவரை நம்பி களத்தில் இறங்கினால், நம்மை நடுக்காட்டில் தவிக்க வைத்து விடுவார் போலிருக்கிறதே' என, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலின் நடவடிக்கைகளைப் பார்த்து, புலம்புகிறார், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், பீஹார் முன்னாள் முதல்வருமான, லாலு பிரசாத் யாதவ்.பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான, நிதிஷ் குமாருடனான கூட்டணியிலிருந்து வெளியேறிய பின், 'எப்படியாவது மீண்டும் அரசியலில் பெரிய இடத்தை பிடிக்க வேண்டும்' என, முனைப்புடன் இருக்கிறார், லாலு.இதனால், காங்கிரசை காக்கா பிடிக்கும் முயற்சியில் இறங்கினார். அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் ஒரே மேடையில் அமர வைத்து, பலத்தை காட்ட முடிவு செய்தார். இதில், ராகுலும் பங்கேற்பார் என, பெரிதும் நம்பினார்.
ஆனால் அவர், 'அவசரமாக வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதால், உங்கள் கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது' என கூறி, வெளிநாடு பறந்து விட்டார்.கடுப்பான லாலு, 'அரசியலில் அனுபவம் இல்லாதவரை நம்பி, களத்தில் இறங்கியது, என் தப்புத் தான்' என, கட்சி பிரமுகர்களிடம் புலம்புகிறார்.'ஒரு பெரிய கட்சியின் துணைத் தலைவராக இருப்பவர், இங்கிருந்து அரசியல் செய்யாமல், அடிக்கடி வெளிநாடு போகிறாரே; கட்சி எப்படி உருப்படும்' என, ராகுலை, கடுமையாக விமர்சித்து வருகிறார்.காங்கிரஸ் கட்சியினரோ, 'லாலு சொல்வதென்ன வோ உண்மை தான்; இந்தாண்டில் மட்டும், இதுவரை, எட்டு முறை வெளிநாட்டுக்கு சென்றுள்ளார், எங்கள் துணைத் தலைவர் ராகுல்' என, ஈன ஸ்வரத்தில் முனங்குகின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement