Advertisement

'டவுட்' தனபாலு

தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார்: தினகரன் தரப்பில் இருந்து, மேலும் பல, எம்.எல்.ஏ.,க்கள், எங்கள் பக்கம் வர இருக்கின்றனர். எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது; நேரம் வரும் போது, அதை சட்டசபையில் நிரூபிப்போம்.

டவுட் தனபாலு:
முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு, பெரும்பான்மையை நிரூபிக்கணும்னு, ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் கேட்டு வருது... நேரம் வரும்போது நிரூபிப்போம் என்றால், பெரும்பான்மைக்குத் தேவையான, எம்.எல்.ஏ.,க்களை உங்க பக்கம் இழுத்த பிறகா என்ற, 'டவுட்' தான் வருது...!

காங்., துணைத் தலைவர் ராகுல்:
பா.ஜ.,வும், ஆர்.எஸ்.எஸ்.,சும், ஒன்று அல்லது இரண்டு தேர்தல்களில் போராடுவர். பிறகு, காங்கிரஸ் தான் ஆட்சிக்கு வரும்.

டவுட் தனபாலு: ஏற்கனவே உங்க தலைமையில், கூட்டணியில் சேர கட்சிகள் தயங்கி வருது... இன்னும் ரெண்டு தேர்தலுக்கு, வெற்றி பெற முடியாதுன்னு இவ்வளவு வெளிப்படையா பேசிய பின், உங்க பக்கம் யார் வருவாங்க... போற போக்கைப் பார்த்தால், அடுத்து வரும் தேர்தல்களில் நீங்களே பங்கேற்பீங்களா என்பதே, 'டவுட்'டா இருக்கே...!

அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ., கனகராஜ்:
ஜெ., இருந்த காலத்தில், அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. ஆனால், தற்போது இருக்கும் நிலை வேறு. எனவே, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

டவுட் தனபாலு: 'அ.தி.மு.க.,வின், 1.50 கோடி தொண்டர்களும், இங்கேயே தான் இருக்காங்க... மக்கள் மத்தியிலும், அரசுக்கு நன்மதிப்பு கூடிக்கிட்டே வருது... இனி, தி.மு.க., வளர்ச்சி அவ்வளவுதான்'னு, ஆட்சியாளர்கள் சொல்லி வருவது எல்லாம் பொய்யா... ஆளுங்கட்சியின் பலவீனத்தை இப்படி அம்பலமாக்குவது, மேலும் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்ற, 'டவுட்' வரலையா...!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement