Advertisement

அக்கம் பக்கம்

கறார் கோவிந்த்!
'இவரை, ரொம்ப குறைவாக மதிப்பிட்டு விட்டோமோ' என, புது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பற்றி, சீரியசாக யோசிக்க துவங்கியுள்ளனர், ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றும் அதிகாரிகளும், ஊழியர்களும்.ராம்நாத் கோவிந்த், ஜனாதிபதியாக பதவியேற்ற போது, 'ரொம்ப ஜாலியான மனிதராக இருப்பார் போலிருக்கிறது. நாம், சுதந்திரமாக இருக்கலாம். இன்னும் ஐந்து ஆண்டுக்கு, எந்த பிரச்னையும் இருக்காது' என, 'ஓபி' அடித்தே பழக்கப்பட்ட அதிகாரிகளும், ஊழியர்களும் நினைத்தனர்.
ஆனால், தற்போது அவரது நடவடிக்கைகளைப் பார்த்து, விழி பிதுங்கி போயுள்ளனர். ஜனாதிபதி மாளிகை விதிகளை பின்பற்றுவதில், ரொம்பவும் கறாராக இருக்கிறார், ராம்நாத் கோவிந்த்.
வேலை செய்யாமல், அரட்டை அடிப்பவர்கள், ஏமாற்றுபவர்கள் பற்றிய பட்டியலையும் தயார் செய்யும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால், ஜனாதிபதி மாளிகை, சமீப காலமாக, நிசப்த மாளிகையாக இருக்கிறது.
தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்து முடித்து, நேரம் முடிந்ததும், முதல் வேலையாக வீட்டுக்கு சென்று விடுகின்றனர், அதிகாரிகளும், ஊழியர்களும்.
'இதற்கு முன் ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜி, நம்மை சுதந்திரமாக விட்டார்; இவர், இத்தனை கெடுபிடி காட்டுகிறாரே; இவரிடம் தாக்குப்பிடிப்பது சிரமம் தான்' என, புலம்புகின்றனர், அரட்டை ஆபீசர்கள்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement