Advertisement

பக்க வாத்தியம்

கலவரம் துாண்ட சதி!

'நீட்' தேர்விலிருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்காத, மத்திய - மாநில அரசுகளை கண்டித்து, எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், 'நீட்' தேர்வுக்கு ஆதரவாகவும், மாணவி அனிதா மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் மனு கொடுக்க, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், மதுரை கலெக்டர் அலுவலகம் வந்திருந்தார்.
அவர் கூறுகையில், 'அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தில், 'நீட்' தேர்வு மற்றும் மாணவி அனிதா மரணத்தை பயன்படுத்தி, கலவரங்களை துாண்ட சிலர் சதி செய்கின்றனர். சமூக நீதியை உருவாக்குவதாக, 'நீட்' தேர்வு திகழ்கிறது' என, அடுக்கிப் பேச, 'இவரு எப்பப்பா, இவ்ளோ விபரமா பேச ஆரம்பிச்சாரு... பத்திரமா வீடு போய் சேரணுமே...' என, நிருபர்கள் கலாய்த்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement