Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு: 'நீட்'டுக்கு ஏற்கனவே ஓராண்டுக்கு விலக்கு கொடுத்து, பார்லிமென்டில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தொடர்ந்து அதற்கு விலக்கு அளிக்க முடியாது. தமிழக, பா.ஜ., சார்பில், நீட் தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். அத்துடன், நீட் தேர்வுக்கு ஆதரவாக, 14ல், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

'மாநில அரசு வேண்டாம், வேண்டாம்னு மறுத்தும், 'நீட்' தேர்வை வலுக்கட்டாயமா திணிக்க முடிஞ்ச உங்களால, அதே பாணியில, நவோதயா பள்ளிகளையும் திணிச்சிருக்க முடியாதா... அதை ஏன் செய்யலை...' என கேட்க தோன்றும் வகையில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு:
நாட்டில், நவோதயா பள்ளிகளில் படித்த பல மாணவர்கள், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் தான், ஐ.ஐ.டி., - என்.ஐ.டி.,க்களில் சேருவோர் குறைவு. ஆனால், முன்னாள் முதல்வர்களான, ஜெ., - ஓ.பி.எஸ்., மற்றும் இன்றைய முதல்வர், ஈ.பி.எஸ்., என, அனைவரும், மத்திய அரசு பள்ளிகளான நவோதயா பள்ளிகளுக்கு நடவடிக்கை எடுக்கவில்லை. நீட்டுக்கு எதிராக போராடுவோர், ஏன், நவோதயா பள்ளிகள் வேண்டும் என போராடவில்லை?

புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர், கந்தசாமி பேட்டி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும், மாநில அமைச்சர்களும் பலமுறை மத்திய அமைச்சர்களை அணுகினாலும், மத்திய அரசிடம் இருந்து உரிய நிதியை பெற முடியவில்லை. ஆதிதிராவிட மாணவர்களுக்கு, 'சென்டாக்' உதவி தொகை, 100 சதவீதம் வழங்குவோம் எனக்கூறி, ஆட்சிக்கு வந்தோம். அது தொடர்பாக, கவர்னருக்கு கோப்புகளை அனுப்பியும், அதற்கு அவர் அனுமதி தரவில்லை.

''சரி விடுங்க... நீங்க விழுந்து விழுந்து ஆதரவு கொடுத்துட்டு இருக்கிற நடிகர் ரஜினி, முதல்வரான மறுநாளே, கல்வியை மாநில பட்டியலுக்கு மாத்திடுவார் பாருங்க...' என, சொல்ல தோன்றும் வகையில், காந்திய மக்கள் இயக்கத்தின தலைவர் தமிழருவி மணியன் பேச்சு:

தி.மு.க., 14 ஆண்டுகள், மத்திய அரசில் இடம் பெற்றிருந்த போதும், ஜெயலலிதா, 14 ஆண்டுகள் முதல்வராக இருந்த போதும், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற முயற்சிக்கவில்லை. இனியாவது, ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்துவதை விட்டு, கட்சி அரசியலை கடந்து, அனைத்து கட்சியினரும் பொதுமக்களும் தமிழகத்தின் தலைநகரில் ஒன்று திரண்டு, குரல் கொடுத்து, கல்வியை, மாநில பட்டியலுக்கு மாற்ற வழி காண வேண்டும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement