Advertisement

டீ கடை பெஞ்ச்

பெண் அதிகாரியின் கறார் வசூல் வேட்டை!


''முதல்வரின் சொந்த ஊருல, புகுந்து விளையாடுதாவ வே...'' என்றபடியே, அரட்டையை ஆரம்பித்தார் அண்ணாச்சி.''அங்க, ஏதாவது விளையாட்டு போட்டி நடக்குதா பா...'' என்றார் அன்வர்பாய்.''அட, முழுசா கேளும் வே... அ.தி.மு.க., ஆட்சி, ௨௦௨௧ வரை நீடிக்குமாங்கிற சந்தேகம், அந்த கட்சியினருக்கு வந்துட்டு... இடையில, ஆட்சி கவுந்து, தேர்தல் வந்தாலும், மறுபடியும் ஆட்சியை பிடிக்க முடியாதுன்னும், தெளிவாவே தெரிஞ்சு வச்சிருக்காவ வே...
''அதனால, அந்த கட்சி நிர்வாகிகள், இலவச வீடு கட்ட அனுமதி வாங்கி தர்றது, சத்துணவு அமைப்பாளர், அங்கன்வாடி பணியாளர் நியமனம்னு, வசூல் வேட்டையில
இறங்கிட்டாவ...
''சேலம் மாவட்ட ஆளுங்கட்சிக்காரங்க, மின்வாரிய ஊழியர்கள், ஆசிரியர்கள் இடமாறுதல்ல, புகுந்து விளையாடுதாவ வே... அதிகாரிகளும், அவங்க கேட்கிறதை செஞ்சு குடுத்துட்டு, நாலு காசு பார்த்துட்டு போயிடுதாவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.
''புது உத்தரவால, ஊழல் அதிகமாயிடுத்து ஓய்...'' என, அடுத்த விஷயத்திற்கு வந்தார் குப்பண்ணா.''எந்த துறையிலங்க...'' என்றார்
அந்தோணிசாமி.''கிரானைட், கல் குவாரிகளுக்கு மாநில, மாவட்ட சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழுவிடம் ஒப்புதல் வாங்கணும்... 'அதோட, மாநில சுற்றுச்சூழல் அமைச்சகத்திடமும் தடையில்லா சான்று வாங்கணும்'னும் புதுசா ஒரு உத்தரவை, அரசாங்கத்துல போட்டா ஓய்...
''சுற்றுச்சூழல் அமைச்சகத்துல, சான்றிதழ் தர இழுத்தடிக்கறா... அதுவும் இல்லாம, பலருக்கும், 'கப்பம்' கட்ட வேண்டியிருக்கு... இதனால, குவாரி உரிமையாளர்கள் புலம்பிண்டு இருக்கா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
''கமிஷன் விஷயத்துல, கறாரா இருக்காங்க பா...'' என, கடைசி தகவலை பேச ஆரம்பித்தார் அன்வர்பாய்.''யாருவே அது...'' என்றார் அண்ணாச்சி.
''பெரம்பலுார் மாவட்டத்துல இருக்கிற ஒரு பெண் அதிகாரியை தான் சொல்றேன்... மூணு மாசத்துக்கு முன்னாடி தான், இங்க வந்தாங்க பா...
''அதுக்கு முன்னாடியே, முடிஞ்ச டெண்டர் பணிகளுக்கான தொகையை, கான்ட்ராக்டர்களுக்கு குடுக்க, ரெண்டு சதவீதம் கமிஷன் வேணும்னு
கேட்குறாங்க...
''இது பத்தி, சிலர் கேட்டப்ப, 'சசிகலா சொந்தக்காரர்கிட்ட, ரெண்டு கோடி ரூபாய் கொட்டி கொடுத்து தான், இந்த பதவிக்கு வந்திருக்கேன்... அதை, எப்படி எடுக்குறது'ன்னு, 'ஓப்பனாவே' பேசுறாங்க பா...
''சத்துணவு முட்டை சப்ளை செய்ற நாமக்கல் நிறுவனம், நேரடியாவே, இவங்களுக்கு கமிஷனை கொடுத்துடுது... அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்துலயும், ஆளுங்கட்சியினர் கை காட்டுனவங்களுக்கு, 'போஸ்டிங்' போட்டு, வரும்படி பார்த்துட்டாங்க பா...
''இந்த அதிகாரியை மாத்தியே ஆகணும்னு, சென்னை வரை புகார் போயிருக்கு... சீக்கிரமே மாற்றம் இருக்கும்னு சொல்றாங்க பா...'' என, முடித்தார்
அன்வர்பாய்.ஒலித்த மொபைலை எடுத்த குப்பண்ணா, ''அண்ணா சொல்லுங்கோ... சாந்தாட்ட எல்லாம் பேசி முடிச்சுட்டேளோ...'' என, தள்ளிச் சென்று பேச, நண்பர்கள் அரட்டை தொடர்ந்தது.20 சதவீதம் மாமூல் வெட்டினால், 'சரக்கு' விற்க அனுமதி!


''மொத்தம், ௮௦ அறைகள் போட்டிருக்கா ஓய்...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''யாருக்குங்க...'' என கேட்டார் அந்தோணிசாமி.
''வேலுார் கோட்டை மைதானத்துல நேத்து சாயந்தரம்,
எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நடந்துச்சோல்லியோ... 20 ஒன்றியங்கள்ல இருந்தும், பள்ளி மாணவர்கள், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள்னு, 10 ஆயிரம் பேரை, காலை, ௧௦:௦௦ மணிக்கே, விழா பந்தலுக்கு அழைச்சுண்டு போயிட்டா ஓய்...
''விழாவுக்கு போன அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் தங்கறதுக்கு, சொகுசு ஓட்டல்கள்ல, 80 அறைகள் முன்பதிவு செஞ்சிருந்தா... 'இதுக்கே, பல லட்சம் ரூபாய் காலி'ன்னு, மாவட்ட அதிகாரிகள் புலம்பிண்டு இருக்கா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
''புது விசுவாசிக்கு ரொம்பவே முக்கியத்துவம் குடுத்தாருங்க...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார்
அந்தோணிசாமி.''யாரு வே...'' என கேட்டார் அண்ணாச்சி.
''மதுரை, திருமங்கலத்துல, அரசு கல்லுாரியை, முதல்வர் பழனிசாமி, சமீபத்துல திறந்து வச்சாருங்க... ரிப்பன் வெட்டுற இடத்துல, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் முன்னாடியே போய், 'போஸ்' கொடுக்க நின்னுட்டு இருந்தாங்க...
''முதல்வர் வந்து கத்திரியை எடுத்து, சுத்து முத்தும் பார்த்துட்டு, 'உள்ளூர்க்காரர் வரட்டும்'னு சொல்லிட்டார்... எல்லாரும் திரும்பி பார்க்க, அமைச்சர் உதயகுமார் பின்னால இருந்து ஓடி வந்தார்... அவரை பக்கத்துல நிறுத்தி, ரிப்பனை முதல்வர்
வெட்டுனாருங்க...''சசிகலா குடும்பத்தின் தீவிர விசுவாசியா இருந்த உதயகுமார், இப்ப பழனிசாமி அணிக்கு வந்துட்டார்... அதனால தான், அவருக்கு இந்த மரியாதைன்னு மதுரை, அ.தி.மு.க.,காரங்க சொல்றாங்க...'' என, முடித்தார்
அந்தோணிசாமி.''மாமூல் வாங்கிட்டு, மது விற்பனை செய்ய அனுமதி கொடுத்துடுறாங்க பா...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார் அன்வர்பாய்.
''எந்த ஊருல வே...'' என்றார் அண்ணாச்சி.
''கும்பகோணத்துல, ௨௩ டாஸ்மாக் கடைகள் இருந்துச்சு... எல்லாத்தையும் முதல்ல அடைச்சவங்க, இப்ப, ஆறு கடைகளை திறந்துட்டாங்க... கடைகள் இல்லாத ஏரியாவுல, புதுச்சேரி மது, கள்ளச்சாராய விற்பனை சூப்பரா நடக்குது பா...
''ஒருத்தர், ௧,௦௦௦ ரூபாய்க்கு மது விற்பனை செஞ்சா, ௨௦ சதவீதம், அதாவது, ௨௦௦ ரூபாய், போலீசாருக்கு மாமூல் கொடுத்துடணும்... அவங்களை போலீசார் தொந்தரவு பண்ண மாட்டாங்க...
''இப்படி தான், கும்பகோணத்துல, சந்து, பொந்தெல்லாம் கூவி விற்காத குறையா, 'சரக்கு' விற்பனை நடந்துட்டு இருக்கு பா...'' என, முடித்தார்
அன்வர்பாய்.பெரியவர்கள் கிளம்ப, நாயரும், கல்லா பக்கம் சென்றார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement