Advertisement

'டவுட்' தனபாலு

தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின்: முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை, 22 அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ.,க்கள் வாபஸ் பெற்றுள்ளனர். அவர்கள் யார் யார், அவர்களுக்கு எவ்வளவு கொடுத்தனர், என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.டவுட் தனபாலு: ஆளுங்கட்சி சண்டையில், ஏதாவது ஒரு தரப்பை எதிர்ப்பது தான், மற்றொரு தரப்புக்கு வேகத்தை கொடுக்கும்... அடிச்சுப்பிடிச்சு அவர்களாகவே, ஒரு வழியை எதிர்க்கட்சிக்கு உருவாக்கி தருவாங்க... நீங்களோ, இரு தரப்பின் மீது பாய்வது, அவர்களுக்குள்ளான மனக்கசப்பை மறந்து கைகோர்க்க வைத்திடும்கற, அரசியல் கணக்கு உங்களுக்குத் தெரியலையா என்ற, 'டவுட்' வருதே...!லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை: தி
.மு.க.,வில், ஸ்டாலின், கனிமொழி, அழகிரி ஆகியோரிடத்தில் கருத்து வேறுபாடு இல்லையா? அதுமாதிரித் தான், அ.தி.மு.க.,விலும் கருத்து வேறுபாடு உள்ளது.
டவுட் தனபாலு: தி.மு.க., மாதிரித் தான், அ.தி.மு.க.,வும்னு சொல்லுங்க... கருத்து வேறுபாடு என்பது ரொம்பச் சாதாரண விஷயம்தானே... அதை ஏன், அப்போது அவ்வளவு வீரியமா விமர்சித்தீங்க... இத்தனைக்கும், 'கட்சி எங்களுக்குத் தான் சொந்தம்'னு, சின்னத்தை முடக்கும் அளவுக்கு, அவர்கள் யாரும் போகலையே... விட்டால், 'இதுதான், அ.தி.மு.க.,வின் ஜனநாயகம்'னு, காதுல பூசுத்துவீங்களோ என்ற, 'டவுட்' ஏற்படுதே...!
பா.ஜ., -- எம்.பி., சுப்ரமணியன்சாமி:
கட்சியின் ஒற்றுமைக்காக அ.தி.மு.க., இணைந்து செயல்படவும், தி.மு.க.,வுக்கு வாய்ப்பு தரக்கூடாது என்ற எண்ணத்திலும், முதல்வர் பழனிசாமியே ராஜினாமா செய்ய வேண்டும். வேறு யாரையாவது முதல்வராக சசிகலா நியமிக்க வேண்டும்.டவுட் தனபாலு: அ.தி.மு.க., மீதும், சசிகலாவின் மீதும் அக்கறையில், ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூட, தமிழக பா.ஜ.,விடம் காட்டுவது இல்லையே ஏன்... லோக்சபா தேர்தல் துவங்கி இன்று வரைக்கும், சொந்தக் கட்சிக்கு ஒரு அறிவுரையையும் சொல்லாத நீங்க, அடுத்த கட்சியின் மீது எதுக்கு இவ்வளவு பாசமா இருக்கீங்க என்பதுதான், பல, 'டவுட்'களை கிளப்புது...!முதல்வர் பழனிசாமி:
உள்ளாட்சி தேர்தல் வரும்போது தான், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச முடியும்.

டவுட் தனபாலு: 'நாங்கள் விரும்பி என்ன பயன்... அவர்கள் அதற்கு பெரிய மனசு பண்ணணுமே'ன்னு கேட்காமல், இவ்வளவு தைரியமா, இப்படி ஒரு பதிலைச் சொல்றீங்களே... என்னாச்சுங்க உங்களுக்கு... ஏன் இந்த, 'டவுட்'னா, நீங்க முதல்வராதில் இருந்து, இந்த நொடி வரைக்கும், மத்திய அரசையோ, பா.ஜ.,வையோ ஒரு வார்த்தையும் விமர்சிக்கலை... மாறாக, அவர்களின் திட்டங்களையும், ஜனாதிபதி வேட்பாளர்களையும் முழு ஈடுபாட்டோடு ஆதரித்து வர்றீங்க... உள்ளாட்சி தேர்தலில் மட்டும், அவர்களை எதிர்த்து போட்டி யிட்டுடவா போறீங்க...!
தமிழக வனத்துறை அமைச்சர் சீனிவாசன்:
எம்.எல்.ஏ., ஜக்கையன் போல், தினகரன் அணியில் உள்ள மற்ற, எம்.எல்.ஏ.,க்களும், எங்களுக்கு ஆதரவு அளிப்பர்டவுட் தனபாலு: 'பெரும்பான்மையை நிரூபிக்க, இன்னும் இரண்டே, எம்.எல்.ஏ.,க்கள் தான் தேவைப்படுறாங்க... அது பெரிய விஷயமல்ல... பாதாளம் வரை பாயும்... அவர்கள் எங்க பக்கம் வருவாங்க'ன்னு, ஒரு மாசத்துக்கு முன்னமே சொல்லிட்டீங்களே... இப்ப இருக்கும், 'டவுட்' எல்லாம், அந்த பாதாளம் எத்தனை சூட்கேஸ் அடுக்கும் அளவுக்கு, ஆழம் இருந்தது என்பது மட்டும் தான்...!
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்:
தமிழக கவர்னர், பா.ஜ.,வின் தலைவர் போல் செயல்படுகிறார். எனவே, அவரை மாற்றிவிட்டு, தமிழகத்தை சேர்ந்த ஒருவரை நிரந்தரமாக, முழுநேர கவர்னராக நியமிக்க வேண்டும்.டவுட் தனபாலு: இவ்வளவு காலம் அரசியலில் இருந்தும், எப்படி இப்படி ஒரு கோரிக்கையை வைக்குறீங்க... தேர்தலை வைத்தா கவர்னர்கள் நியமிக்கப்படுறாங்க... மத்திய அரசு தானே, கவர்னரை தேர்ந்தெடுக்குது... இந்த நிலையில், எந்த கவர்னர் வந்தாலும், இந்தக் குற்றச்சாட்டு இருக்கத்தான் செய்யும் என்பது, உங்களுக்குத் தெரியாதோ என்ற, 'டவுட்' வருதே...!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement