Advertisement

காரைக்குடியில் ஒரு 'பொம்மைக்காரர்' வீடு.


காரைக்குடியில் ஒரு 'பொம்மைக்காரர்' வீடு.

வீட்டிற்குள் கண்காட்சி இருக்கிறதா?இல்லை கண்காட்சிக்குள் வீடு இருக்கிறதா? என்று கணிக்க முடியாத அளவிற்கு வீட்டின் நுழைவு வாயிலில் துவங்கி வரவேற்பறை,சமையலறை,படிக்கட்டுகள் என்று பார்க்கும் இடங்களில் எல்லாம் பழமையான அபூர்வமான எளிதில் பார்க்கமுடியாத பொம்மைகள், பொருட்கள் நிறைந்திருக்கிறது.

சிவகெங்கை மாவட்டத்தின் டிவிஎஸ் இருசக்கர வாகன மெயின் டீலராக இருக்கும் தொழிலதிபர் ஜி.ஆர்.மஹாதேவன் ஒரு பழம்பொருள் சேகரிப்பாளர்.பொதுவாக செட்டிநாட்டில் உள்ளவர்கள் மிகுந்த கலை ரசனை உள்ளவர்கள் வெளிநாடுகள் போய்வரும் போது அங்குள்ள கலைப்பொருட்களை கொண்டுவந்து தங்கள் வீட்டில் அழகாக வைத்திருப்பார்கள்.

ஏன் காரைக்குடி கழனிவாசல் பகுதியில் உள்ள நம் வீட்டிலும் இது போன்ற பழமையான கலைப்பொருட்களைக் கொண்டு கண்காட்சி நடத்தக்கூடாது என்று எண்ணி முதன் முதலாக 900 ரூபாய்க்கு ஒரு பழைய கார் பொம்மை வாங்கினேன், அதன்பிறகு பழம் பொருட்கள் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக இதுவரை 15 ஆயிரம் பொருட்களை சேர்த்துவிட்டேன்,இதற்கு முக்கிய காரணம் தன்னைப் போலவே ஆர்வம் கொண்டிருக்கும் தன் மணைவி பிரியதர்ஷினிதான் என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.
இப்போது காரைக்குடியில் யாராவது பழமையான பொருட்கள் வைத்திருந்தால் நம்மிடம் இருப்பதை விட எங்களிடம் கொடுத்தால் அழகாக பத்திரமாக இருக்கும் என்று கூப்பிட்டு ஒரு விலைபோட்டு கொடுத்துவிடுவர்.இது போக சென்னை,மும்பை உள்ளீட்ட பெருநகரங்களில் உள்ள பழம்பொருள் வியாபாரிகளிடம் இருந்தும் பொருட்களை வாங்கிவருகிறார்.வெளிநாடுகளுக்கு சென்றாலும் முதலில் இவர் செல்வது அங்குள்ள பழம்பொருள் விற்கும் கடைகளுக்குதான். இப்படி தேடி தேடி வாங்கிய பொருட்களில் பாதிக்கு பாதி பழமையான பொம்மைகள் என்பதால் இவர்கள் வீடே இப்போது பொம்மைக்காரர் வீடு என்றாகிவிட்டது.

பெரும்பாலும் 1900 முதல் 1970 வரையிலான காலகட்டத்தைக் கொண்ட ரேடியோ,இசைத்தட்டுகள்,கிராமபோன்,பழங்கால ஜப்பான்,சீனா பீங்கான்பொம்மைகள்,டெலிபோன்கள்,புகைப்படங்கள்,டின் பொம்மைகள்,ரேடியோக்கள்,பாத்திரங்கள்,ரூபாய்கள்,நாணயங்கள்,விளம்பர பலகைகள்,ஒற்றை மாட்டுவண்டி,முதன் முதலில் வந்த குக்கர்,லாந்தர் விளக்குகள் என்று ஏகப்பட்ட பொருட்கள் இருக்கிறது.இந்த பொருட்களை இவர் காட்சிப்படுத்திவைத்துள்ள விதம் இன்னும் பராட்டிக்குரியதாகும்.இந்த பொருட்களில் பல இப்போது இயங்கும் நிலையில் இருப்பது வியப்பிர்க்குரியதாகும்.
எனக்கு கிடைக்கும் பழைய பொருட்களுடன் தொடர்பு உள்ளவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புவது வழக்கம்,1950ம் ஆண்டு சென்னை நல்லி நிறுவனத்தின் இருந்து வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட பட்டுப்புடவைக்கான பார்சல் பெட்டி ஒன்று கிடைத்தது.இப்படி என்னிடம் ஒரு பெட்டி இருக்கிறது என்று தெரிவித்தேன்.கொஞ்சநாள் கழித்து சென்னையில் இருந்து நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் தமது நண்பர்களுடன் இங்கே நேரடியாக வந்து பெட்டியைப் பார்த்தவர் மிகுந்த சந்தோஷப்பட்டார். அப்போது இதன் விலை 3ரூபாய் ஐம்பது பைசா என்றெல்லாம் பழசை சொல்லி ஆனந்தப்பட்டவர் இருந்து விருந்து சாப்பிட்டு எங்களை பெரிதும் கவுரப்படுத்திவிட்டே சென்றார் அதன் பிறகு அவர் தன் குடும்ப விழாவிற்கு அழைக்கும் அளவிற்கு நெருங்கிவிட்டார், எல்லாவற்றுக்கும் காரணம் இந்த பழம்பொருள்தான் என்று நெகிழ்கிறார்.

வீட்டில் இப்போது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது போல இரண்டு மடங்கு பொருட்கள் வைக்க இடமில்லாமல் பெட்டிகளில் வைத்துள்ளேன் என் ஆர்வம் இப்போது இன்னும் அதிகமாகியிருக்கிறது இந்த பொருட்களை பார்க்கும் போதும் அதனுடன் பழகும் போது அதன் காலகட்டம் பற்றி பேசும்போது இனம் தெரியாத பரவசமும் சொல்லமுடியாத சந்தோஷமும் ஏற்படுகிறது,இந்த அனுபவத்தை பலரும் உணரவேண்டும் என்பதற்க்காக வீட்டில் உள்ள இந்த கண்காட்சியை பார்வையாளர் காண அனுமதித்துள்ளார். சனி,ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் அனுமதி உண்டு,வருவதற்கு முன் போன் செய்துவிட்டு வரவேண்டும் எண்:9842417051.
-எல்.முருகராஜ்.


murugaraj@dinamalar.in

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (7)

 • Muthu - Langenfeld,ஜெர்மனி

  இது ஒரு நல்ல தம்பதியின் கலைப்படைப்பு வாழ்த்துக்கள்

 • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

  அருமையான புகைப்படம் , பார்க்கவே சந்தோஷமாய் உள்ளது , எவ்வளவு அழகு

 • sankar - trichy,இந்தியா

  இது ஒரு வியாதி

 • S Rama(samy)murthy - karaikudi,இந்தியா

  எமது ஊரை சேர்த்தவர் என்பதில் எமக்கு பெருமை , இந்த பணியை தொடரவும்

 • A shanmugam - VELLORE,இந்தியா

  கண்ணை கவரும் கலைஒவியம் கொண்ட உங்க வீட்டில் என்றும் லட்சுமி குடி இருப்பாள்.

 • SakthiBahrain - Manama,பஹ்ரைன்

  ரொம்பவும் பாராட்டக்கூடிய மற்றும் மதிக்க கூடிய செயல்...வாழ்த்துக்கள்....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement