Advertisement

சொல்கிறார்கள்

காலாவதி தேதியை கவனிக்காமல்தவறு செய்கின்றனர்!


முதலுதவி பெட்டியில் இருக்க வேண்டிய மருந்துகள் குறித்து கூறும், டாக்டர் எஸ்.குகநாத்: என்ன தான் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு இருந்தாலும் கூட, நம்மில் ஒரு சிலர் வீடுகளில் தான், முதலுதவி பெட்டி வைத்திருக்கிறோம். ஒரு சிலர், அவசரத்துக்கு முக்கியமாக தேவைப்படும் சில மருந்துகளை மட்டுமே வைத்திருப்பர்.முதலுதவி பெட்டியில், காலாவதி தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். பெரும்பாலானவை, ஒன்றரை அல்லது இரண்டாண்டுகள் வரை இருக்கும் என்பதால், கட்டாயம் அதை பார்த்தே வாங்க வேண்டும்.முதலுதவி பெட்டியில் உள்ள மருந்துகளின் காலாவதி தேதியை ஞாபகத்தில் கொள்ளாமல் பலரும், தவறு செய்கின்றனர். அதனால், அவசரத்திற்கு எடுக்கும் போது அவற்றில் பல மருந்துகள் காலாவதியாகி இருக்கும்.முதலுதவி பெட்டியில் என்னென்ன இருக்க வேண்டும் என, சில இன்டர்நேஷனல் வழிகாட்டுதல்கள் இருக்கின்றன. அதன்படி, மீடியம் சைஸ் டிங்சர், ஆன்டி செப்டிக் ஆயின்மென்ட், தீக்காயத்துக்கான ஆயின்மென்ட், பேசிக் பேண்டேஜ் மற்றும் பேண்ட் எய்ட்.கை, கால்களில் வீக்கங்களுக்கு இறுக்கமாக சுற்றும் க்ரப் பேண்டேஜ், சேப்டி பின்ஸ், மைக்ரோபோர் பிளாஸ்டர், ஸ்டெரைல் காட்டன் இவை உள்ளடக்கியது தான், அடிப்படையான முதலுதவி பெட்டி.
இதைத் தவிர, நோய்களுக்கு ஏற்ப, சில மருந்துகளை சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகள் இருக்கும் வீடு எனில், சளி, இருமல், டயரியா தான் அதிகம் வரும். 5 வயதிற்குட்பட்ட குழந்தை இருக்கும் வீட்டில், அடிப்படையாக ஒரு, 'பாராசிட்டமால் சிரப்'பாவது இருக்க வேண்டும். தேவைப்படும் போது, குழந்தைகள் நல மருத்துவரின் ஆலோசனைப்படி, அதைக் கொடுக்கலாம். இருமல், சளி, ஜலதோஷத்திற்கு இருமல் சிரப். இவைத் தவிர, உங்களின் தேவைக்கேற்ப மருந்துகளை வைத்துக் கொள்ளலாம்.முதியோர் இருக்கும் வீட்டில், ஒருவேளை அவர்கள், பி.பி., அல்லது சுகர் மாத்திரைகள் சாப்பிடும் பட்சத்தில், ஒரு அட்டை மருந்துகளை கூடுதலாக வைத்துக் கொள்ள
வேண்டும். இதயம் சம்பந்தப்பட்ட நோய் இருப்பவர்களின் வீட்டில், அதற்கான மருந்துகளான, ஆஸ்பிரின் மற்றும் கொலஸ்ட்ரால் மாத்திரை வைத்திருக்க வேண்டும்.நெஞ்சுவலி, ஹார்ட் அட்டாக்கிற்கான அறிகுறி தெரியவரும் பட்சத்தில், ஒரு ஆஸ்பிரினையோ அல்லது கொலஸ்டரால் மாத்திரையையோ போட்டு, உடனே மருத்துவரை அணுக வேண்டும்.மற்றபடி, அலர்ஜி, சளி, காய்ச்சல், உடம்பு வலிக்கான மருந்துகளை, அவசியம் வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். எலக்ட்ரோலைட், ஓ.ஆர்.எஸ்., ஆகிய பாக்கெட்களையும்
வைத்துக் கொள்வது நல்லது. இவை வாந்தி, டயரியா, லோ பி.பி.,க்களுக்கு உதவும்.வலிப்பு இருப்பவர்களுக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பதையும், நாம் தெரிந்து வைத்திருப்பது அவசியம். இரும்பு கொடுப்பது மிகவும் தவறு. அவர்களை மல்லாக்க படுக்க வைத்து, ஒருபுறமாக திருப்பி தலையை துாக்கி பிடித்து, உடனே ஆம்புலன்சை அழைத்து, மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
இவையெல்லாம் தான் முதலுதவியில் அடிப்படையான விஷயங்கள். இதற்கு மேல் மருத்துவரை அணுகுவது தான் நல்லது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement