Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'நீங்க நல்லா தானே இருக்கீங்க...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை: பா.ஜ., ஆட்சிக்கு வந்தபின், முற்போக்கு எழுத்தாளர்கள், இடதுசாரி சிந்தனையாளர்கள் மீதான தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்தியாவின் பன்முகத் தன்மையை சீர்குலைத்து வரும் மதவெறி சக்திகளின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது, மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு சக்திகளின் முதன்மையான கடமை என்பதை, பத்திரிகையாளர், கவுரி லங்கேஷ் படுகொலை உணர்த்துகிறது.'எதுக்கு, எதை ஒப்பீடு செய்வது என்பது தெரியாத அரசியல்வாதியா இருக்கீங்களே...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் பேட்டி:
'நீட்' தேர்வை எதிர்த்து மாணவர்கள், ஜனநாயக அறவழியில், அகிம்சை வழியில் போராட்டம் நடத்தலாம். ஆனால், சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது. வேறு வழியில் போராடுவதை, அனுமதிக்க முடியாது. நம் சுதந்திர போராட்டம் கூட, அறவழியில், அகிம்சை வழியில் தான் நடந்தது. அதை, மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தம் தான், காவலர்களை தற்கொலைக்கு துாண்டுகிறது. மாநிலத்தை காக்கும் முக்கியக் கடமையை ஏற்றுள்ள காவல் துறையினர், மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் பாதுகாக்க வேண்டியது, அரசின் கடமை. முதலில், காவல் துறையில் காலியிடங்கள், நிரப்பப்பட வேண்டும். அவர்களின் மன அழுத்தத்தைப் போக்க, உளவியல் கலந்தாய்வு, பொழுதுபோக்குகள், விளையாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு, அடிக்கடி ஏற்பாடு செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


'அப்ப, தினகரன்கிட்டேர்ந்து அணி மாறுறவங்களைப் பத்தி தான் உங்க கவலையா...' என, கேட்கத் தோன்றும் வகையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எம்.எல்.ஏ., அபுபக்கர் பேட்டி
: 'உடனடியாக சட்டசபையை கூட்ட வேண்டும்; இல்லையெனில், குதிரை பேர அரசியல் நடக்கும்' என, கவர்னரை சந்தித்து கூறினோம். அதை உறுதிப்படுத்தும் வகையில், தினகரனுக்கு ஆதரவு கொடுத்த, ௧௯ பேரில், ஒருவர் இன்று அணி மாறிஇருக்கிறார். நாங்கள் சொன்ன குற்றச்சாட்டு, நிரூபிக்கப்பட்டுள்ளது. உடனடியாக தமிழக சட்டசபையை கூட்டி, மெஜாரிட்டியை முதல்வர் நிரூபிக்க வேண்டும்.
'வார்த்தை ஜாலமெல்லாம் இந்த நேரத்துல எடுபடாது... காரியம் ஆற்றுவது தான் பலனைக் கொடுக்கும்...' என, கூறத் தோன்றும் வகையில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் பேட்டி:
பழனிசாமி தலைமையிலான ஆட்சி, பெரும்பான்மையை இழந்திருப்பது, நாட்டுக்கே நன்றாக தெரியும். குறுக்கு வழியில் திட்டங்களை தீட்டி, தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு, பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அதில் ஒரு முயற்சி தான், உரிமைக் குழுவை கூட்டியது. உரிமைக் குழுவைக் கூட்டுவதற்கே, இந்த ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை. பெரும்பான்மை இருந்தால் தான், உரிமைக் குழுவுக்கே பெருமை.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement