Advertisement

அக்கம் பக்கம்

திருத்தவே முடியாது!


'மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யலாம் என நினைத்தால், இப்படிப்பட்ட தேவையில்லாத பிரச்னைகள் வந்து, தொல்லை கொடுக்கிறதே...' என புலம்புகிறார், ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் தலைவருமான, சந்திரபாபு நாயுடு.ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிந்து, தெலுங்கானா தனி மாநிலமாகி விட்டதால், வளர்ச்சிப் பணிகளில் மிகவும் பின்தங்கிய மாநிலமாக, ஆந்திரா மாறி விட்டது.'இந்த நிலையை மாற்றி, ஆந்திராவை, அனைத்து துறைகளிலும், நாட்டிலேயே முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும்' என்பதற்காக, கடுமையாக உழைத்து வருகிறார், சந்திரபாபு நாயுடு.தினமும், புதுப்புது திட்டங்களை அறிமுகப்படுத்தி, அதிகாரிகளையும், பொதுமக்களையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்காக, இலவச சேவை மையத்தை, சமீபத்தில் துவக்கி வைத்தார். '1100' என்ற எண்ணை அழைத்து, பொதுமக்கள், தங்கள் குறைகள், பொது புகார்களை தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டது.சான்றிதழ் பெறுவது, சட்டவிரோத செயல்கள் குறித்த புகார்களை அளிப்பது உள்ளிட்டவற்றுக்காகத் தான், இந்த சேவை மையம் ஏற்படுத்தப்பட்டது.ஆனால், 'செலவுக்கு காசில்லை, கடன் கொடுக்க முடியுமா; மனைவியுடன் சண்டை, தீர்த்து வைக்க முடியுமா...' என்பது போன்ற புகார்கள் தான், சேவை மையத்துக்கு அதிகம் வருகின்றன.இது குறித்த தகவல், சந்திரபாபுவுக்கு தெரிவிக்கப்பட்டதும், 'ஊகூம்... இந்த ஜென்மத்தில், நம் ஆட்களை திருத்த முடியாது' என, விரக்தியில்
ஆழ்ந்துள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement